அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் விமானநிலையத்தில் , பிரிட்டீஸ் எயார்வேஸ் விமானமொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நண்பகல் 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த மேற்படி விமானமானது மெக்கரன் விமானநிலையத்தில் இருந்து லண்டனின் கெட்விக் நோக்கி பயணிக்க இருந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னரே விபத்து ஏற்பட்டதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

COa1uUNUsAAiA4kசம்பவத்தின் போது விமானத்தினுள் 159 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும் 14 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் ட தாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 50 தீயணைப்பு படைவீரர்கள் இணைந்து தீயை அணைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே சம்பவத்துக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

நிலமையை சுமூகமாக கையாண்டமைக்காக விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Usa-Felit-03-600x603Usa-Felit-06-600x348Usa-Felit-01Usa-Felit

Share.
Leave A Reply