இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 19 இராஜாங்க அமைச்சர்களும் 21 துணை அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களில் இரண்டு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களும் இடம்பெற்றுள்ளனர்.

பிரதி அமைச்சர்களில் மூன்று முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள்

01. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கம் – ஏ.எச்.எம். பௌஸி

02. நெடுஞ்சாலைகள் – டிலான் பெரேரா

03. காணிகள் – டி.பி. ஏக்கநாயக்க

04. நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு – பிரியங்கர ஜயரத்ன

05. நிதி – லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன

06. தொழிலாளர் நலன்கள் – ரவீந்திர சமரவீர

07. கல்வி – வீ . இராதாகிருஷ்ணன்

08. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி – பாலித ரங்கேபண்டார

09. மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் – திலிப் வெதஆரச்சி

10. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் – நிரோஷன் பெரேரா

11. பாதுகாப்பு – ருவன் விஜேவர்தன

12. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் – ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா

13. பல்கலைக்கழக கல்வி – மொஹான்லால் கிரேரு

14. கைத்தொழில் வாணிபம் – சம்பிக்க பிரேமதாஸ

15. சிறார்கள் நலன் – விஜயகலா மகேஸ்வரன்

16. சர்வதேச வர்த்தகம் – சுஜீவ சேனசிங்க

17. நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம் – வசந்த சேனாநாயக்க

18. விவசாயம் – வசந்த அலுவிகார

19. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் – சுதர்ஷனீ பெர்ணான்டோ புள்ளே

புதிய பிரதி அமைச்சர்கள்

01. வன ஜீவராசிகள் – சுமேதா ஜீ ஜயசேன

02. அரச பரிபாலனம் மற்றும் முகாமைத்துவம்- சுசந்த புஞ்சிநிலமே

03. கிராமிய பொருளாதாரம் – அமீர் அலி

04. நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி – லசந்த அழகியவண்ண

05. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை – இந்திக பண்டாரநாயக்க

06. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் – மொஹமட் பைசல் காசிம்

07. தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரம் – துலிப் விஜேசேகர

08. பெருந்தோட்டக் கைத்தொழில்- லக்ஸ்மன் வசந்த பெரேரா

09. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை – நிஷாந்த முத்துஹெட்டிகம

10. பேரிடர் முகாமைத்துவம் – துனேஷ் கன்கந்த

11. பெற்றோலியத்துறை – அனோமா கமகே

12. வெளியுறவு – ஹர்ஷ டி சில்வா

13. மின்வலு – அஜித் பீ பெரேரா

14. அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி – இரான் விக்ரமரத்ன

15. சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரி – ரஞ்சன் ராமநாயக்க

16. போக்குவரத்து – அசோக அபேசிங்க

17. உள்நாட்டலுவல்கள் – அருந்திக பெர்னாண்டோ

18. தொலைத் தொடர்பு, டிஜிட்டல் அடிப்படை வசதிகள் – டில்ஹான் பஸ்நாயக்க

19. விளையாட்டுத்துறை – எச்.எம்.எம் ஹாரிஸ்

20. மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி – கருணாரத்ன பரணவிதானகே

21. சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ மத விவகாரம் – நிமல் லன்ஸா

அதன்படி 19 இராஜாங்க அமைச்சர்களும் 21 பிரதியமைச்சர்களுமாக 40 பேர் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

 

11219369_115160328839113_8563491600017977161_n

Share.
Leave A Reply