சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பெங்களூரில் சந்தித்து உரையாடியிருக்கிறார், அதோடு அவருடன் புகைப்படங்களையும் விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் கமல்.
கடவுளே இல்லை என்று வெளிப்படையாக மறுத்துப் பேசக்கூடிய கமல் ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்துப் பேசியது அனைவரது மத்தியிலும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பின் போது கமல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் கமலின் ரசிகர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.
நடிகர் கமல் ஹாசன் பொதுவாக அனைவர் மத்தியிலும் நாத்திகவாதி என்றே அறியப்படுகிறார். இதனை எந்த சூழ்நிலையிலும் அவர் வெளிப்படுத்தத் தயங்கியது இல்லை.

பெங்களூர் சந்திப்பு இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றிருந்த கமல் அங்கு வாழும் கலை அமைப்பை நிறுவி அதனை நடத்தி வரும் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து உரையாடி இருக்கிறார்.
மரியாதை நிமித்தம் நடந்த இந்த சந்திப்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பொன்னாடை போர்த்தி அவரைக் கவுரவித்து இருக்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிறந்த இடமான பாபநாசத்தில் சமீபத்தில் கமல் பட ஷூட்டிங் நிகழ்ந்ததும் படத்திற்கு பாபநாசம் என்று பெயர் வைத்ததையும் இந்த சந்திப்பிற்குப் பிறகு நிறைய ரசிகர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
தீபாவளி முதல் தற்போது கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது, மேலும் இந்த முறை தீபாவளிக்கு 4 தினங்களுக்கு முன்பே தீபாவளி ரேஸில் களத்தில் குதிக்கிறார் கமல். கடவுள் இருக்கிறார்னு சொல்லலை, இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்..