தொலைக்காட்சி நேரடி விவாதத்தின்போது இந்து மகாசபையை சேர்ந்த சுவாமி ஓம் ஜி மகாராஜியை, இந்து மதத்தை சேர்ந்த பெண் தலைவர் தீபா ஷர்மா சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சாமியாரான ராதே மா மீது வரதட்சணை வழக்கு உட்பட எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்.
இந்நிலையில், ஐபிஎன்7 என்ற தொலைக்காட்சியில் ‘ஆஜ் கா முத்தா’ என்ற விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
நேரடியாக ஒளிபரப்பட்ட இந்த விவாதத்தில் இந்து மதத் தலைவர் தீபா ஷர்மா மற்றும் இந்து மகாசபையை சேர்ந்த சுவாமி ஓம் ஜி மகாராஜ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, சர்ச்சை சாமியார் ராதே மா பற்றி சுவாமி மகாராஜ் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார்.
மேடையில் அமர்ந்திருந்த இந்து மதத் தலைவர் தீபா ஷர்மா திடீரென எழுந்து வந்து, சுவாமி ஓம் ஜி மகாராஜை சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு மகாராஜியும் தாக்குதல் நடத்தினார்.
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மதத் தலைவர்கள் இரண்டு பேர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் மாநாட்டில் பரபரப்பு… மேலாடையின்றி புகுந்து போராட்டம் நடத்திய 2 பெண்கள் -(வீடியோ)
அந்த இரண்டு பெண்களையும் மாநாட்டு நிர்வாகிகளும், போலீஸாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவினர்தான் இதை நடத்தி பரபரப்பைக் கிளப்பி விட்டனர்.
அப்போது மாநாட்டு அமைப்பாளர் குழுவைச் சேர்ந்த ஒரு ஆண், அப்பெண்களில் ஒருவரை உதைத்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது.