இந்திய திரையுலகின் “என்சைக்ளோபீடியா” என்று சிவாஜியை கூறுவது மிகையாகாது. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன்.
அன்று முதல் இன்று வரை திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புது முகத்திற்கும் முகவரி சிவாஜியாக தான் இருக்க முடியும். இல்லை நான் கமல், ரஜினி, விக்ரம் போன்றவர்களை கண்டு தான் வந்தேன் என்று சிலர் கூறலாம்.
ஆனால், அவர்களே சிவாஜியை கண்டு தான் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஓர் விருட்சம். இந்த ஆலமரத்தின் கிளைகளில் தான் பல குருவிகள் கூடு கடி வாழ்ந்து வருகின்றன.
இனி, இந்த ஆலமரத்தின் விதையாக புதைந்து, விருட்சமாக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க வியக்க வைக்கும் தகவல்களை பற்றி காணலாம்…..28-1440739708-1-mudhal-mariyadhai-sivaji9876-600-jpg


இயற்பெயர்:
நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர், ” விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்” ஆகும்.sivaji

“சிவாஜி” கணேசன் பெயர் காரணம்
‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.28-1440739719-3-sivaji245-600

300 சிவாஜி சிவாஜி’
கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
28-1440739725-4-30fr-sivaji-795385e

நடிகர் திலகத்தின் தனி சிறப்பு
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
sivajia

நாடகத்தனம்
நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
28-1440739737-6-sivaji-ganesan-1-600

கதாப்பாத்திரமாக வாழ்ந்தவர்
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
28-1440739743-7-sivaji-ganesan-11-600

சிவாஜியும் அரசியல் வாழ்க்கையும்
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
28-1440739749-8-vasantha-maligai

தனிக் கட்சி தொடங்கிய சிவாஜி
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
28-1440739757-9-sivaji924-600

நயாகராவின் ஒரு நாள் மேயர்
1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
sivajias

எகிப்து அதிபரை தனியாய் சந்தித்த சிவாஜி
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.sivajiasf

விருதுகளும், சிறப்புகளும்
ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது (1962 – 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966, பத்ம பூஷன் விருது- 1984, செவாலியர் விருது -1995, தாதாசாகெப் பால்கே விருது – 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.

Share.
Leave A Reply