டெல்லி: ஒரு பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சர்வ சாதாரணமான விஷயம் ஆகும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிப்பார்கள்.

இந்நிலையில் பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க சிலர் விரும்பினர்.

இதையடுத்து அவர்கள் ஒரு ஆணுக்கு கருப்பு நிற கவுன் அணிந்து தலையில் டோப்பா வைத்து முகம் தெரியாத அளவுக்கு மறைத்தனர். அந்த ஆள் சாலையின் ஓரமாக நின்று கொண்டு சுவரில் சிறுநீர் கழித்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அடப்பாவி ஒரு பெண் இப்படி பொது இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிறாரே என்று வியந்து பார்த்தனர்.

ஒன்று இரண்டு பேர் அவர் அருகே சென்று அதை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

உச்சகட்டமாக ஒரு வாலிபர் கோபம் அடைந்து பெண் வேடத்தில் இருக்கும் நபர் மீது கல்லை வீசினார். உடனே இந்த சோதனையை செய்த குழுவைச் சேர்ந்த ஒருவர் ஓடி வந்து சிறுநீர் கழிப்பது பெண் அல்ல ஆண் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பிரபலமாக உள்ளது.

Share.
Leave A Reply