வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு தேரில் ஏறி வலம் வந்தார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் மாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.

valli-alvar-01valli-alvar-03valli-alvar-04valli-alvar-05valli-alvar-06valli-alvar-07valli-alvar-08valli-alvar-09valli-alvar-10valli-alvar-12

Share.
Leave A Reply