ரஷ்யாவின் வொரென் நகரில் 2 நாட்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த கர்ப்பிணி நாய் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. ரஷ்யாவின் வொரென் நகரில் உள்ள சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த வடிம் ரஸ்டாம் என்பவருக்கு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
ஆனால், அருகில் எந்த நாயுமே இல்லை. தொடர்ந்து சத்தம் வந்ததைக் கவனித்த வடிம், இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சத்தம் வந்த இடத்தை அவதானித்து, அந்தப் பகுதியை தோண்ட ஆரம்பித்துள்ளார்.
உள்ளிருந்து உயிருடன் நாய் ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. அதனை வெளியே கொண்டுவந்த போதுதான் அது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
நாய் இருப்பது தெரியாமல் 2 நாட்களுக்கு முன்பு, அந்த இடத்தில் வீட்டு வசதி அதிகாரிகள் நடைபாதை அமைத்துள்ளனர்.
அந்த நடைபாதை சில நாட்களுக்கு முன்னர் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது அந்த நாய் அங்கிருந்த சிறிய பள்ளத்திற்குள் சென்றிருக்கிறது. இது தெரியாமல் பள்ளத்திற்கு மேலாக நடைபாதையை அமைத்துள்ளனர் அதிகாரிகள்.
கர்ப்பிணியாக இருந்த அந்த நாய் 2 நாட்களாக மண்ணுக்குள் புதைந்து உணவு, நீர் எதுவுமின்றி அவஸ்தைப்பட்டுள்ளது.