ஆண்களுக்கு குண்டான பெண்களைத் தான் பிடிக்கும் என்பது தவறு. உண்மையில் ஆண்களுக்கு நல்ல அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்ட பெண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். மேலும் தமிழ் சினிமாவில் நெளிவு சுழிவுகளைக் கொண்ட நடிகைகள் இல்லை என்று நினைக்க வேண்டாம்.
பாலிவுட்டிற்கு இணையாக தமிழில் பல நடிகைகள் சிக்கென்று, அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்டுள்ளார்கள். மேலும் அவர்களுள் சிலர் தமிழில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் கலக்கியுள்ளார்கள்.
இங்கு தன் அழகான நெளிவு சுழிவுகளில் பல ரசிகர்களை கவிழச் செய்த டாப் 10 தமிழ் நடிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ஏமி ஜாக்சன்
நெளிவு சுழிவு என்று வரும் போது, ஏமி ஜாக்சனை அடித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இவர் அவ்வளவு அற்புதமாக தனது உடலமைப்பை பராமரித்து வருகிறார். மேலும் இவர் சர்வதேச பத்திரிக்கைகள் பலவற்றில் பிரபலமான மாடலாகவும் திகழ்கிறார்.

இலியானா
நண்பன் படத்திலிருந்து பிரபலமானவர் தான் இலியானா. அதிலும் இவரை வர்ணிக்கும் வகையிலேயே அப்படத்தில் இடம் பெற்ற பாடல், இவரை இன்னும் பிரபலமாக்கியது. மேலும் இவர் பாலிவுட்டில் நடித்த பல படங்கள் வெற்றிகரமாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பாருங்களேன்…
தமன்னா
தமிழில் கலக்கி, தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருப்வர் தான் தமன்னா. இவரும் தன் அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்டு பல ரசிகர்களைக் கவர்ந்தவர். உங்களுக்கு தமன்னாவை பிடிக்குமா?
ஸ்ருதிஹாசன்
பாடகியாக இருந்து, பின் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் தான் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் தன் குரலுக்கு மட்டுமின்றி, தன் அழகான சிக்கென்ற உடலமைப்பு மற்றும் நடிப்பின் காரணமாகவும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர்.
அமைரா தஸ்தூர்
அனேகன் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அமைரா தஸ்தூர். இவரும் தமிழ் நடிகைகளில் அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்ட டாப் 10 நடிகைகளுள் ஒருவராவார்.

ஸ்ரேயா சரண்
‘சிவாஜி’ படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற ஸ்ரேயா பிரபலமானதற்கு அவரது நடிப்பிற்கு அடுத்தப்படியாக, உடலமைப்பும் ஒரு காரணம் எனலாம். மேலும் இவரும் தமிழில் பல திரைப்படத்தில் நடித்ததோடு, தற்போது பாலிவுட்டில் த்ரிஷ்யம் என்னும் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த் கூட அழகான வளைவு நெளிவுகளைக் கொண்டவர். இவர் படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், இவருக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் இவரும் அழகான நெளிவு சுழிவுகளைக் கொண்ட டாப் 10 நடிகைகளுள் ஒருவராக உள்ளார் என்றால் பாருங்களேன்…

த்ரிஷா
த்ரிஷா பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரும் அழகான உடலமைப்பைப் பெற்றவராவார். அதுமட்டுமின்றி, இன்றும் இவர் பலரது கனவு கன்னியாக உள்ளார்.
நயன்தாரா
நயன்தாரா ஆரம்பத்தில் கொழுகொழுவென்று இருந்தாலும், பின் தன் உடலமைப்பை சிக்கென்று பராமரித்து வருகிறார். மேலும் நடிகைகளிலேயே பல ரசிகர்களைக் கொண்டவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். சரி, உங்களுக்கு நயன்தாராவைப் பிடிக்குமா?