உலகத்தில் எங்குமே நடந்திராத கொடுமையிது!! ஒரு சிறுமியை   12 ஆண்டுகளாக தொடர்ந்து பலதரப்பட்ட “தந்தை, அண்ணன், தாத்தா, நண்பர்கள், சாதாரண போலீஸார், உயர் பதவிகள் வகிக்கும் பொலிசாஸார்,  டாக்டர், வக்கீல்,கண்டக்டர் ……  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

நீதிபதியும்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டாரோ தெரியவில்லை??

இந்தக் கொடுமை எங்கு  நடந்துள்ளது தெரியுமா?

தனித்துவமான கலாச்சார, பண்பாட்டை,  தாயை கடவுளாக மதிக்கின்ற தமிழ் நாட்டில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது.

police
சிவகங்கை: சிவகங்கை சிறுமி தொடர் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஏடிஜிபி ஒருவரும் சிக்குகிறார்.

இந்த வழக்கில் எஸ்.ஐ. உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (47). சி.ஆர்.பி.எப். போலீசாக பணியாற்றி, டிஸ்மிஸ் ஆனவர். இவரது மகன் கார்த்திக் (20). மகள் சுகந்தி (17 பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கோயம்புத்தூர் சென்ற சுகந்தி, அங்கு தனது அத்தை செல்வியிடம், தன்னை பல ஆண்டுகளாக தந்தை மற்றும் அண்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்டக்டர், அண்ணனின் நண்பர்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனை சென்றபோது டாக்டர், வக்கீல் ஆகியோரும் பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து புகார் செய்ய போலீஸ் நிலையம் சென்றபோது ஆரம்பத்தில் எஸ்.ஐ., பின் இன்ஸ்பெக்டர் அவரைத் தொடர்ந்து ஒரு ஏடிஜிபி ஆகியோரும் தன்னை சீரழித்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் செல்வி புகார் செய்தார். இதனடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வின்சென்ட், இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், `சுகந்தியை 12 ஆண்டுகளாக தொடர்ந்து பலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி. வரை உயரதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு உள்ளது.

எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி, சி.பி.ஐ, சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, சுகந்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ சங்கர் (55), மற்றும் சுரேஷ்குமார் (32), செந்தில்குமார் (36), அரவிந்த் (25) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இதில் சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சுகந்தியின் உறவினர்கள். அரவிந்த், சுகந்தியின் அண்ணனின் நண்பர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர்புரத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் (55) என்பவரை, நேற்று சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், சிவகங்கையில் சுகந்தியின் வீட்டருகே வசித்து வந்தார்.

அப்போது அவர், சுகந்தியை பலமுறை பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே நேற்றிரவு சுகந்தியின் தாத்தா உறவு முறையான முத்துராக்கு (48) கைது செய்யப்பட்டார்.

மேலும் மதுரை இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ் உயரதிகாரிகள் வரை பலர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ்.ஐ., சங்கர், தான் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பின்னர், மதுரையில் ஐ.ஜி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவர் பல முறை சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். பின்னர் அப்போது ஐஜியாக இருந்தவருக்கு அறிமுகம் செய்துள்ளார்.

அந்த ஐஜியும் பல முறை சிறுமியை சீரழித்துள்ளார். அதோடு அந்த ஏடிஜிபிக்கு இன்ஸ்பெக்டர் சிறுமி மட்டுமல்லாமல் பல பெண்களையும், சிறுமிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ள திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

அந்த இன்ஸ்பெக்டருக்கு முழு நேர வேலையே ஐஜிக்கு பெண்களை அறிமுகம் செய்து வைப்பதுதான். அப்படித்தான் சிறுமியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அந்த ஐஜி மதுரையில் பணியாற்றும் வரை தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார். இப்போது அவர் ஏடிஜிபியாக சென்னையில் பணியாற்றி வருகிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டிடம் முழுமையான வாக்குமூலத்தை அளித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதனால், இன்ஸ்பெக்டர் முதல் ஏடிஜிபி வரை கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுவரை எஸ்.ஐ. உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்பதால், தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பியாக பணியாற்றி தற்போது மதுரை மதுவிலக்கில் பணிபுரியும் எஸ்பி சக்திவேல் நேற்று பகல் 12மணிக்கு சிவகங்கை எஸ்பி அலுவலகம் வந்தார்.

சிறுமி பாலியல் வழக்கில் எஸ்ஐ கைது செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் முன்னாள் எஸ்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2012 முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீசார் குறித்த விசாரணைக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply