ரஷ்யா உக்­ரே­னுக்கு எதி­ராக மேலும் நெருக்­கு­தல்­களைக் கொடுக்­குமா என்ற கேள்வி 2016-ம் ஆண்டு எட்டாம் மாத்தில் இருந்து எழுப்பப்­ப­டு­கின்­றது.

அதற்கு ஏற்ப பல நகர்­வுகள் ரஷ்­யாவில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உக்­ரேனைத் துண்­டா­டு­வது என்­பதில் இருந்து உக்­ரேனை முற்­றாக ஆக்­கி­ர­மிப்­பது என்­பது வரை ரஷ்­யாவின் தெரி­வுகள் பரந்­துள்­ளன.

உக்­ரேனை நேட்­டோ­விலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திலும் இணை­யாமல் தடுப்­பதில் ரஷ்யா தற்­கா­லிக வெற்றி கண்­டுள்­ளது. இந்த வெற்றியை நிரந்­த­ர­மாக்­கு­வற்கு ரஷ்யா பெரு முயற்சி எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

ரஷ்­யாவின் எட்டாம் பொருத்தம்

ஆண்டின் எட்டாம் மாதம் என்­பது ரஷ்­யா­விற்கு மோச­மான மாதம் என பல வர­லாற்றுப் பதி­வுகள் சொல்­கின்­றன. சோவியத் ஒன்­றி­யத்தின் வீழ்ச்சி 1991-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்­ப­மா­னது.

1999-ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் செச்­னியப் போர் தொடங்­கி­யது. 2000-ஆம் ஆண்டு ரஷ்ய நீர்­மூழ்கிக் கப்பல் வெடித்து 118 கடற்­ப­டை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

2008-ஆம் ஆண்டு ஜோர்­ஜி­யா­வுடன் போர். 2009-ஆம் ஆண்டு அணைக்­கட்டு உடைப்பு. 2010-ஆம் ஆண்டு காட்­டுத்தீ. 2011-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு. இந்த மோச­மான நிகழ்­வுகள் வரி­சையில் 2016-ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் விள­டிமீர் புட்டீன் தனது நெருங்­கிய தோழரும் படைத்­து­றைக்குப் பொறுப்­பா­ன­வ­ரு­மான செர்கீ இவனோவ் (Sergei Ivanov) பத­வியில் இருந்து விலக்­கினார்.

ரஷ்­யாவின் இளமை இதோ! இதோ!!

செர்கீ இவ­னோவின் பத­வி­நீக்கம் உல­கையே ஆச்­ச­ரி­யப்­பட வைத்­தது. புட்­டீனைச் சுற்­றி­யுள்ள அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் சிலொ­விகி குழு­வினர் என அழைக்­கப்­ப­டுவர்.

அவர்­களில் பெரும்­பான்­மை­யானோர் சோவியத் ஒன்­றி­யத்தின் உள­வுத்­து­றையின் உச்ச அதி­கா­ரி­யாக புட்டீன் இருந்­த­போது அவ­ருடன் பணி­யாற்­றி­ய­வர்­களும் அவரின் நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­க­ளு­மாகும்.

உக்ரேன் தொடர்­பாக புட்­டீனின் ஆத­ர­வா­ளர்களி­டையே ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பாடே செர்கீ இவ­னோவின் பதவி விலக்­க­லுக்­கான காரணம். செர்கீ இவ­னோவின் இடத்­திற்கு 44 வய­தான அண்டன் வைனோ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

புட்டீன் ஏற்­க­னவே பல முதி­யோரைப் பத­வியிலிருந்து ஓய்­வு­பெறச் செய்து இளை­யோரால் அவர்­க­ளது இடங்­களை நிரப்­பி­யுள்ளார். அது புதிய சிந்­த­னையை நாட்டின் முகா­மையில் கொண்டு வரு­வ­தற்­கா­கவா அல்­லது தனக்கு எதி­ராக எவரும் பதவிப் போட்­டிக்கு வராமல் செய்­யவா என்ற வினா எழுப்­பப்­ப­டு­கின்­றது.

செல்­வாக்கு

விள­டிமீர் புட்­டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவ­ரது செல்­வாக்கு ரஷ்­யர்கள் மத்­தியில் அதி­க­ரிக்கும். ரஷ்­யா­விற்கு எதி­ராக மேற்கு நாடுகள் பொரு­ளா­தாரத் தடை கொண்டு வந்­த­போது அவ­ரது செல்­வாக்கு ரஷ்­யாவில் அதி­க­ரித்­தது.

ரஷ்ய விளை­யாட்டு வீரர்கள் போதைப் பொருள்­களைப் பாவித்­தனர் என்ற குற்­றச்­சாட்டை மேற்கு நாடுகள் முன்­வைத்­த­போது புட்டீனின் செல்­வாக்கு அதி­க­ரித்­தது. ரஷ்யா சிரி­யாவில் தலை­யிட்­டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்­டீனின் செல்­வாக்கு அதி­க­ரித்­தது.

2016 ஓகஸ்ட்டில் மேலும் ஒரு நிகழ்வு நடந்­தது. ரஷ்யா தன்­னுடன் இணைந்த கிறி­மி­யாவின் எல்­லை­யோரக் கிரா­மத்தில் கிறி­மி­யாவில் உள்ள ரஷ்யப் படை­நி­லைகள் மீது தாக்­குதல் நடத்த ஊடு­ரு­விய உக்­ரே­னிய உளவுப் படை­யி­னரை ரஷ்யப் படை­யினர் கைது செய்­தனர்.

இதைத் தொடர்ந்து விள­டிமீர் புட்டீன் உக்ரேன் பிரச்­ச­ினையைத் தீர்க்க ஏதும் செய்­யாமல் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடுபடுகின்றது என்றன.

கைது செய்யப்பட்­ட­வர்­களில் ஒருவர் ரஷ்ய தொலைக்­காட்­சியில் தோன்றி தானும் தன்­னுடன் ஊடு­ரு­வலில் ஈடு­பட் ­ட­வர்­களும் உக்ரேனின் உளவுத் துறை யைச் சேர்ந்­த­வர்கள் என்றார்.

உக்ரேன் ஊடு­ருவல்

உக்­ரேனின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பதி­ல­டி­யாக உக்­ரேனின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் வசிக்கும் ரஷ்­யர்­களின் பிரிவினைவா­தி­களை உக்­ரே­னிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வைக்கப் போவ­தா­கவும் ரஷ்யா மிரட்­டு­கின்­றது.

அது நடக்­கும்­போது நிதி நெருக்­க­டியில் இருக்கும் உக்­ரே­னுக்கு மேற்கு ஐரோப்­பிய நாடு­களும் வட அமெ­ரிக்க நாடு­களும் படைக்கலன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பர­வ­லாக முன்­வைக்கப்படும்.

அந்த நாடு­களில் அதற்கு பெரும் ஆத­ரவு இருந்த போதும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஜேர்­ம­னியும் அப்­படிச் செய்து ரஷ்­யர்­களின் ஆத்திரத்தைத் தூண்ட விரும்­ப­வில்லை.

படை­களை நகர்த்­திய ரஷ்யா

உக்­ரே­னிய உள­வா­ளிகள் கிறி­மி­யா ­விற்குள் ஊடு­ரு­வி­னார்கள் எனச் சொன்ன ரஷ்யா, அந்த ஆபத்­தி­லி­ருந்து தனது பிராந்­திய ஒருமைப்பாட்டைப் பாது­காக்க வேண்டும் என்ற போர்­வையில் தனது படை­ய­ணி­களை மேலும் உக்­ரேனை நோக்கி நகர்த்­தி­யது. அதில் ரஷ்­யாவின் எஸ் – -400 என்னும் ஏவு­கணை எதிர்ப்பு முறை­மையும் அடங்கும்.

ஆனால் எஸ்- – –400 2016 டிசம்பர் மாத­ம­ள­வில்தான் செயற்­பட முடியும். உக்­ரேனின் உள­வா­ளி­களைக் கைது செய்­வ­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே கிறி­மி­யா­விற்கு ரஷ்­யாவிலிருந்து படை­யினர் நகர்த்­தப்­பட்­டனர்.

russiaரஷ்­யாவும் உக்­ரேனும் வர­லாற்றுப் பின்­னணி

சோவியத் ஒன்­றி­யத்தின் வீழ்ச்­சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்­ப­ரப்பை ரஷ்யா விரி­வாக்­கவே விரும்­பி­யது. உக்ரேன் முன்னாள் சோவியத் ஒன்­றி­யத்தில் ஒரு முக்­கிய நாடாகும்.

ரஷ்ய விரி­வாக்­கத்தின் முதல் முயற்சி­யாக ரஷ்­யாவும், உக்­ரேனும், பெல­ரசும் இணைந்து சுதந்­திர நாடு­களின் பொது­ந­ல­வாயம் என்னும் கூட்­ட­மைப்பை 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உரு­வாக்­கின.

பின்னர் இதில் ஆர்­மி­னியா, அஸர்­பைஜான், கஸ­கஸ்தான், கிர்க்­கிஸ்தான், மோல்­டோவா, துர்க்­மெ­னிஸ்தான், தஜி­கிஸ்தான், உஸ்பெக்­கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்­தன.

1993ஆம் ஆண்டு ஜோர்­ஜி­யாவும் இணைந்து கொண்­டது. பின்னர் உக்ரேன், ஜோர்­ஜியா, துர்க்­மெ­னிஸ்தான் ஆகிய நாடு­களில் நடந்த ஆட்சி மாற்­றத்தால் அவை இந்த ரஷ்யா தலை­மை­யி­லான சுதந்­திர நாடு­களின் பொது­ந­ல­வாயம் என்னும் கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றின.

சுதந்­திர நாடு­களின் பொது­ந­ல­வாய நாடு­க­ளி­டையே ஒரு சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திட ரஷ்யா முயற்­சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்­துக்­கொள்ள மறுத்­தன.

2013ஆம் ஆண்டு உக்ரேன், ரஷ்யா, மோல்­டோவா, ஆர்­மீ­னியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை ஏற்றுக் கொண்­டன.

மேற்கு ஐரோப்­பிய நாடுகள் ஐரோப்­பிய ஒன்­றியம் என்னும் பெயரில் தமது நிலப்­ப­ரப்­பையும் பொரு­ளா­தார வல­யத்­தையும் விரி­வாக்கிக் கொண்டு முன்னாள் சோவியத் நாடு­க­ளையும் ரஷ்ய ஆதிக்க வலய நாடு­க­ளையும் தம்­முடன் இணைக்க ரஷ்­யா­விற்கு தான் ஓரம் கட்டப்­பட்டு விடு­வேனோ என்ற அச்சம் பற்­றிக்­கொண்­டது.

அத்­துடன் முன்பு ரஷ்­யா­வுடன் வார்சோ ஒப்­பந்த நாடுகள் கூட்­ட­மைப்பில் இணைந்­தி­ருந்த நாடு­க­ளான போலாந்து, ஹங்­கேரி, ருமேனியா, செக் குடி­ய­ரசு, குரே­சியா ஆகிய நாடு­களும் முன்னாள் சோவியத் ஒன்­றிய நாடு­க­ளான எஸ்­தோ­னிய, லத்­வியா, லித்துவேனியா ஆகி­ய­வையும் ஐக்­கிய அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நேட்­டோவில் இணைந்­ததும் ரஷ்­யாவைச் சிந்­திக்க வைத்­தது.

பதி­ல­டி­யாக தானும் யூரோ ஏசிய பொரு­ளா­தார சமூ­கத்தை உரு­வாக்­கி­யது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விரி­வாக்­கத்தை ரஷ்யா ஒரு ஜேர்­ம­னிய ஆக்­கி­ர­மிப்­பா­கவே கரு­தி­யது.

ஐரோப்­பாவில் ஒரு முக்­கிய நாடா­கிய உக்­ரேனை யார் பக்கம் இழுப்­பது என்ற போட்டி இதை ஒட்டி ஆரம்­ப­மா­னது. உக்ரேன் தனது யூரோ – ஆசிய பொரு­ளா­தர சமூ­கத்தில் இணைய வேண்டும் என ரஷ்யா உக்­ரேனை நிர்ப்­பந்­தித்­தது.

மறு­புறம் நேட்­டோவின் விரி­வாக்­கத்தை ஒரு அமெ­ரிக்க ஆக்­கி­ர­மிப்­பா­க வும் ரஷ்யா பார்த்­தது. விளைவு உக்­ரேனில் கிளர்ச்­சிகள், இரத்தக் கள­ரிகள் போன்­றவை அரங்­கேற்றப் பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்­தது.

ரஷ்ய ஆத­ரவு விக்டர் ஜனுக்­கோவிச் பத­வியில் இருந்து விரட்­டப்­பட்டு ஜேர்­ம­னிக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் ஆத­ர­வான பெற்றோ பொறொ­செங்கோ உக்­ரே­னில் 2014ஆம் ஆண்டு அதி­ப­ரானார்.

சோவி­யத்தின் வீழ்ச்சி இரு­பதாம் நூற்­றாண்டில் நடந்த ஒரு மோச­மான விபத்து. ரஷ்யா மீண்டும் சோவியத் ஒன்­றியம் போன்ற ஒரு பேர­ரசைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கொள்­கையைக் கொண்ட புட்டீன், உக்­ரேனில் 2014ஆம் ஆண்டு நடந்த ரஷ்­யா­விற்கு எதி­ரான ஆட்சி மாற்­றத்தால் வெகுண்டு எழுந்தார்.

உக்­ரேனின் கிழக்குப் பகு­தியில் ரஷ்­யர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். அவர்கள் உக்­ரே­னிற்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்­தனர். ரஷ்­யாவின் பெரும் கடற்­ப­டைத்­தளம் அமைந்­தி­ருந்த உக்­ரேனின் ஒரு பகு­தி­யான கிறி­மி­யாவை ரஷ்யா ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.

அதனால் ரஷ்­யா­விற்கு எதி­ராக மேற்கு நாடுகள் பொரு­ளா­தாரத் தடை கொண்டு வந்­தன. அத்­துடன் தனது ஏற்­று­மதி வரு­மா­னத்­திற்கு எரி­பொ­ருளில் ரஷ்யா பெரிதும் தங்­கி­யி­ருப்­பதால் எரி­பொருள் விலை வீழ்ச்­சி­ய­டையச் செய்யப் பட்­டது. இது ரஷ்யப் பொரு­ளா­தார வளர்ச்­சியைப் பாதித்­தது..

ukra-MMAP-mdரஷ்­யா­விற்கு உக்­ரேனின் முக்­கி­யத்­துவம்

1. உக்ரேன் ரஷ்­யாவின் எதி­ரி­களின் கையில் இருந்தால் ரஷ்யா தனது வல்­ல­ரசு என்ற நிலையை இழக்க வேண்­டி­யி­ருக்கும் என்­பது படைத்­துறை நிபு­ணர்­களின் கருத்து.

2. ரஷ்­யாவின் எரி­பொருள் ஏற்­று­ம­தியில் பெரும்பகுதி உக்­ரே­னு­டாகச் செல்லும் குழாய்­க­ளூ­டா­கவே நடக்­கின்­றன.

3. ஏற்­க­னவே லத்­வியா, லித்­து­வே­னியா, எஸ்­தோ­னியா ஆகிய ரஷ்­யாவின் எல்லை நாடுகள் நேட்­டோவில் இணைந்­துள்ள நிலையில் நேட்டோ என்னும் அமெ­ரிக்­காவின் ஆதிக்­கத்­தி­லுள்ள படைத்­துறைக் கூட்­ட­மைப்பில் இருந்து ஒரு கவசம் போல ரஷ்­யா­விற்கு இருந்­தது உக்ரேன் மட்­டுமே.

4. ரஷ்­யாவின் யூரோ – -­ஏ­சிய பொரு­ளா­தாரக் கூட்­ட­மைப்பில் உக்­ரேனின் இணைவு முக்­கி­ய­மான ஒன்­றாகும்.

5. ரஷ்யா உக்­ரேனைத் தனது பிடியில் இருந்து இழப்­பது உலக அரங்கில் ரஷ்­யாவின் ஆதிக்­கத்தை இல்­லாத ஒன்­றாக்­கி­விடும்.

உக்­ரேனை ரஷ்­யாவால் கைப்­பற்ற முடி­யுமா?

உக்­ரேனை ரஷ்­யாவால் கைப்­பற்­று­வது கடி­ன­மான ஒன்­றல்ல. 2014ஆம் ஆண்டின் பின்னர் ரஷ்­யர்கள் பெரும்­பாலும் வாழும் டொன்பாஸ் என அழைக்கப்படும் உக்­ரேனின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் ரஷ்யா உரு­வாக்­கிய உள்­நாட்டுப் போரால் அங்கு வாழும் 3.3 மில்­லியன் மக்­களில் 1.3 மில்­லியன் மக்கள் உக்­ரேனின் மேற்குப் பகு­திக்கு இடம் பெயர்ந்­தார்கள்.

500,000 மக்கள் ரஷ்­யா­விற்கு தப்­பி­னார்கள். 100,000 மக்கள் வேறு நாடு­க­ளுக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும் டொன்பாஸ் பிராந்தியத்தை உக்ரேனில் இருந்து பிரித்தெடுக்க ரஷ்யாவால் முடியவில்லை. இதற்குக் காரணம் படைத்துறை வலுவின்மையல்ல.

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை நேட்டோ நாடுகள் மேலும் இறுக்கலாம் என்பதே. ஆறு இலட்சம் சதுர கிலோ மீட்டரைக் கொண்ட உக்ரேனைக் கைப்பற்றி ஆதிக்கத்தில் வைத்திருப்பது இலகுவானதல்ல.

மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலர்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் ரஷ்யா பொருளாதார ரீதியில் உக்ரேனைக் கைப்பற்றி வைத்திருப்பது கடினமாகும்.

உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச் சினை, சுற்றிவர இருக்கும் பதவி ஆசை கொண்டவர்களின் பிரச்சினை, ரஷ்யாவிலிருந்து மக்களும் மூலதனங் களும் வெளியேறும் பிரச்சினை ஆகி யவற்றிலிருந்து தப்புவதற்கு பன்னா ட்டு அரங்கில் ரஷ்யாவை ஒரு போர் முனையில் வைத்திருப்பது புட்டீனின் செல்வாக்கிற்கும் பதவிக்கும் பாதுகாப் பாக அமையும். ஆனால் ரஷ்யாவின் பொ ருளாதாரம்?

Share.
Leave A Reply