ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 21
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!- வி.சிவலிங்கம்

    AdminBy AdminJanuary 27, 2020No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to Nandikadal) என்ற நூலிலிருந்து சில பகுதிகள் விரைவில் ஆரம்பமாகிறது.

    அன்பார்ந்த வாசகர்களே!

    2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி காலை 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணத்துடன் தனது தலைமையிலான ராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் வீரமி;க்க போரின் காரணமாக முடிவுக்கு வந்ததாக அதன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன் முகவுரையுடன் ஆரம்பிக்கும் அவரது நூல் சுமார் 740 பக்கங்களைக் கொண்டதாகும்.

    BUP_DFTDFT-15-01

    இலங்கை ராணுவ தரப்பினரே புலிகளின் போராட்டத்தின் உண்மைத் தன்மையை உரைக்கத் தக்கவர்கள். அவர்களது தியாகம், இலட்சியப் பற்று, போராட்ட உற்சாகம், மக்களின் ஆதரவு என்பவற்றை நேரடியாக கண்டவர்கள், அனுபவித்தவர்கள், போராளிகளோடு பேசியவர்கள், அவர்களைத் துன்புறுத்தியவர்கள், குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவர்களையும், பொது மக்களையும் படுகொலை செய்தவர்கள் என்போராகும்.

    எனவே அவர்களது தரப்பில் கிடைத்த அனுபவங்களை நாம் அறிந்து கொள்வது எமது மக்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு அவசியமானதாகும்.

    விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிலரைத் தவிர எவரும் இதுவரை முன்வரவில்லை.

    வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்கள் எவரும் எதனையும் எழுத்தில் வைக்கவில்லை. எனவே எதிரி தரப்பு அனுபவங்களும் எமது போராட்ட வரலாற்றின் பகுதிகளை அறிந்த கொள்ள வாய்ப்பைத் தருகிறது.

    “தமிழர் தரப்பில் தமிழீழம்” என்ற இலட்சியக் கோட்பாட்டுடன் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அதே போன்று அவர்களை ஒழித்துக்கட்ட சிங்கள இளைஞர்கள் ராணுவத்திற்கு எவ்வாறு திரட்டப்பட்டார்கள்? என்பதை அறிவதும் அவசியமானது.

    இப் போராட்டத்தில் தமிழர் மத்தியிலே உயிரழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வறுமையில் சிக்கியவர்கள் என்போர் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பிரிவினரே என ஆய்வுகள் கூறுகின்றன.

    அதேபோன்று ராணுவத்தில் இணைந்து போரினால் இறந்தவர்களும், பாதிக்கப்பட்ட மக்களும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களே எனவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

    அவ்வாறானால் தேசியவாதம் என்பது எப் பிரிவினரைப் பாதித்துள்ளது? எப் பிரிவினர் அதனால் பயன் பெற்றார்கள்?

    தமிழர்களில் கணிசமான தொகையினர் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் தமிழ் சமூகத்தின் எப் பொருளாதாரப் பிரிவைச் சார்ந்தவர்கள்? எஞ்சியோர் யார்? இவர்களுக்கும் தமிழ்த் தேசியவாதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இன்று இவர்களின் பிரதிநிதித்தவம் ஏதாவது உண்டா?

    அதே போலவே சிங்கள தேசியவாதத்தினால் பயனடைந்த மக்கள் பிரிவு யார்? தமது தேசத்திற்காக உயிர்த் தியாகங்களை மேற்கொள்ள திகதியிடப்படாத தமது மரணச் சான்றிதழ்களுடன் போராடிய ராணுவத்தின் சமான்ய சிங்கள குடும்பங்கள் பலன் பெற்றார்களா? போரின்போது

    ஊனமடைந்த ராணுவத்தினர் இன்னமும் அரசுடன் போராடுகிறார்களே, அவ்வாறானால் சிங்கள தேசியவாதம் அவர்களுக்கு உதவியதா?

    ராணுவ அதிகாரி கமல் குணரத்னவின் இந்த நூல் பல போர்க்குற்றங்களை ஒப்புவித்திருப்பதாக இன்றைய நிதி அமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மங்கள சமரவீர அவர்கள் குறிப்பிடுகிறார்.

    சிங்கள பெரும் தேசியவாதத்தின் உண்மைத் தோற்றத்தினை அறியவேண்டுமெனில் நாம் ராணுவத்தின் பயிற்சி நெறிகளை ஆராயவேண்டும்.

    இதற்குப் பதிலாக ஒரு ராணுவ உயர் அதிகாரி தனது ராணுவ அனுபவங்களைத் திரட்டி ஒரு நூலாக்குவதற்கு அவருக்கு ஒரு கோட்பாடு அல்லது இலட்சியம் அல்லது தத்துவம் அவசியமானது. அது என்ன என அறியவேண்டுமெனில் இந்த நூல் அதற்கான சாராம்சமாக அமைகிறது.

    ராணுவம் என்பது தனது தேசத்து மக்களை இன ரீதியாக அணுகுகிறதா? அல்லது தேசத்தின் பிரஜை என்ற வகையில் அணுகுகிறதா? எனப் பார்ப்பது அவசியமானது.

    ஏனெனில் ராணுவத் தாக்குதல்களின் போது உயிரிழப்பைக் குறைப்பது, மனித உரிமை, மனித நேயம் என்பவற்றிற்கு உயர்ந்த மதிப்பளிப்பது ராணுவ பயிற்சியின் இன்றியமையாத அம்சமாகும்.

    ஆனால் இவை எதனையும் ராணுவம் மதித்ததா?

    தீரமிக்க ராணுவத்தினர் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் மனித உரிமை, போரின்போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் பற்றிய நூலையும் வைத்திருந்ததாக பாலஸ்தீன தலைவர் யாசிர் அரபாத் அவர்கள் ஐ நா சபையில் ஒரு கையில் துப்பாக்கியையும், மறுகையில் ஒலிவ் இலையையும் வைத்திருந்தமையை ஒத்தவிதமான மொழியில் தனது ராணுவம் பற்றித் தெரிவித்திருந்தார்.

    போரில் வெற்றியைப் பெற்ற போதிலும அதன் முக்கிய பங்காளிகள் வறுமையில் சிக்கியுள்ள ராணுவத்தின் பெற்றோரே, எனவும் பிரேதப் பெட்டிகள் தொடர்ந்து அனுப்பப்பட்ட போதிலும், நாட்டின் மூலை முடுக்கிலுள்ள இந்தப் பெற்றோரே தொடர்ந்தும் தமது ஆண், பெண் பிள்ளைகளை அனுப்பினார்கள். இல்லையேல் பிரபாகரனின் தமிழீழக் கனவு பலித்திருக்கும் என தனது நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.

    தேசத்தின் இறைமையைப் பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்துள்ள இந்த ராணுவ அதிகாரி, போரின் ரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள சமான்ய தமிழ் மக்கள் இறைமை குறித்த எந்தவித கவலையையும் வெளிப்படுத்தாதது ராணுவத்தின் கோட்பாடுகளின் பலவீனங்களை, அதன் பெரும்தேசியவாத அம்சங்களை தெளிவாக உணர்த்துகிறது.

    de15115c5b24ad91787ae706bf5914e9_Lசமீபத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபய ராஜபக்ஸ அவர்களால் நடத்தப்பட்ட ‘வெளிச்சம்’ என்ற நிகழ்வின் பிரதான அமைப்பாளராக இவர் இருந்துள்ளார்.

    புதிய அரசியல் யாப்பினை எந்த விலை கொடுத்தும் தடுப்பது என்ற முடிவோடு செயற்படும் இக் குழவில் இவரும் உள்ளார்.

    மிகவும் அதிக அளவில் பலராலும் விமர்ச்சிக்கப்பட்ட இந் நூல் இவ் ராணுவ அதிகாரியின் உள் நோக்கங்களைப் புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.

    2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களை அதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவது, தேர்தல் முறையை மாற்றுவது, ஊழல் ஆட்சி முறையை ஒழிப்பது, தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பது போன்ற வாக்குறுதிகளை அளித்துப் பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு அவற்றை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பல தடைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

    இதில் பிரதான தடையாக ராணுவம் இருப்பதால் போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முடியாத நிலை உள்ளது.

    போர்க்குற்ற விசாரணைகளுக்கு ராணுவம் தடையாக இருப்பதன் பின்னணிகளைக் கண்டறிவதற்கும், போரின்போது இடம்பெற்ற பல உண்மைகளை குறைந்தபட்சம் அறிந்து கொள்ளவும் இந் நூல் உதவும் என நம்புகிறேன்.

    275px-Prabhakaranஉதாரணமாக பிரபாகரன் அவர்களை மகிந்தவின் முன்னால் முழந்தாழிட்டு பணியும்படி கோரியதாகவும், அவரது முகத்தில் அறைந்ததாகவும் அதன் பின்னர் அவர் நந்திகடல் ஏரிக்கு எடுத்து வரப்பட்டு சுடப்பட்டார் எனவும் கதைகள் உலாவிய பின்னணியில் அதன் உண்மையை இந் நூலின் மூலமாகவே நாம் அறிய முடியும்.

    இந் நூலினைத் தமிழர்கள் மத்தியில் அறிமுகம் செய்வது எமது நோக்கம் அல்ல என்பதை மிகவும் தெளிவாக உரைக்க விரும்புகிறோம்.

    ஒருவர் தனது அனுபவங்களை எழுதுவதை நாம் தடுக்க முடியாது. அது அவரவர் ஜனநாயக உரிமை.

    ஆனால் முன்னாள் வெளியுறவு அமைச்சரான காலம் சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் கூறியது போல இது ஒரு போர் அல்ல ஏனெனில் போர் என்பது இரு நாடுகளுகளுக்கிடையே ஏற்படுவது என்றார்.

    அவ்வாறானால் இதனைப் போராக ஒருவர் கருதுவாராக இருப்பின் அது அவ்வாறாகவும் இருந்துவிடலாம். இன்றைய அரசியல் சூழலில் ராணுவக் கட்டமைப்பின் உள் நோக்கங்களை அறிவது அரசியல் கோட்பாடுகளை வகுக்க நன்கு உதவும் எனக் கருதுகிறோம்.

    தொகுப்பு : வி. சிவலிங்கம்

    ( உத்தரவுடன் பிரதி செய்தல் நல்லது)

    (Copy right reserved)

     

    Post Views: 22

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இன்றைய நாணயமாற்று விகிதம் – 20.03.2023

    March 20, 2023

    வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி மீது வாள்வெட்டு

    March 17, 2023

    பாடசாலை மாணவிக்கு தனது நிர்வாணப் படங்களை அனுப்பிய பிரதி அதிபர் அத்தனலவில் கைது!

    March 17, 2023

    Leave A Reply Cancel Reply

    January 2020
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் – 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்

    March 21, 2023

    7பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – ஜனாதிபதி

    March 21, 2023

    இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

    March 21, 2023

    சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும்

    March 20, 2023

    இன்றைய நாணயமாற்று விகிதம் – 20.03.2023

    March 20, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் – 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்
    • 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் – ஜனாதிபதி
    • இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
    • சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version