சீன மருத்துவமனையில் வயது முதிர்ந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட வீடியோ ஒன்று அனைவரின் கண்களையும் குளமாக்கியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் செங்கடூவில் நகரில் ஜாங் (வயது 85) மற்றும் அவரது மனைவி வென்(வயது 87) ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜாங்கிற்கு நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் ( chronic pulmonary obstructive disease (COPD) ). அவரது மனைவி வென் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு மூச்சு விடவே சிரமப்பட்டு கொண்டு இருந்தார்.

இருவரும் மருத்துவமனையில் தனி தனி அறையில் சிகிச்சை பெற்ற நிலையில் வென்னிற்கு அதிக மூச்சு திணறல் ஏற்பட ஜாங் தனது மனைவியின் அருகில் தன்னை அழைத்து செல்லுமாறு மருத்துவரிடம் கூறியுள்ளார் . பின்னர் அங்கு நடந்த அனைத்தையும் மருத்துவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

ஜாங் மனைவியின் அருகில் சென்று இரு கைகளையும் பிடித்து ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இது பார்ப்பவரின் கண்களை குளமாக்கியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில் , இந்த தாம்பதியின் இந்த பாசப்பிணைப்பு வீடியோவாயும் கொரோனா பதிப்பிற்குள்ளான தம்பதிகளின் வீடியோ என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply