சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு -கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள்.
மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.
யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம். ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?!
முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 90

