ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, March 25
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    ‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை!!: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்

    AdminBy AdminFebruary 12, 2020No Comments8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இராணுவத்தின்  53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன.

    தனது படைப் பிரிவுடன் இணைந்து சுதந்திர தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த (ITN) நிருபரான சுஜித் விதானபத்திரான என்பவரும் இணைந்து சென்றுள்ளார்.

    பல முக்கியமான விவரணங்களை அவர் வெளியிடும்போது தனது ஒலியையும் இணைக்க உதவும்படி கேட்டுள்ளார்.

    தனது சொந்த விளம்பரத்திற்கு இவற்றை உபயோகிப்பதில்லை எனத் தீர்மானித்து சரியான பொறுப்புள்ள தருணத்தில் அந்த வாய்ப்பைத் தருவதாக உறுதியளித்திருந்தார்.

    அதன் பிரகாரம் பிரபாகரனின் உடல் கிடைத்த அந்த வேளையில் இதைவிட நல்ல தருணம் இனிமேல் கிடைக்காது எனக் கூறிய அவ் ஊடகவியலாளர் தனது குரலைப் பதிவுசெய்யும்படி கேட்டதால் அப்போது பதிவு செய்ததாகக் கூறி அந்த சம்பவத்தை விபரிக்கிறார்.

    அந்த நாள் தனது ராணுவ செயற்பாட்டினதும், சொந்த வாழ்வினதும் மறக்க முடியாத தருணம் எனவும், அன்று தனக்கு மிக ஆறுதலாகவும், இலங்கை மக்களுக்கும், உலகிற்கும் மகிழ்ச்சியான நாள் என வர்ணிக்கிறார்.

    praba-11-291x194

    வேலுப்பிள்ளை பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ‘கரையார்’ சமூகத்தினைச் சேர்ந்த அரச லிகிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் புதல்வராகும்.

    இவர்  பொதுமக்களைத் தொடர்ந்து பயமுறுத்தியதால் இலங்கையின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்பட்டார்.

    இலங்கையின் மிக முக்கிய தலைவர்களான ஜே ஆர், பிரேமதாஸ, சந்திரிகா, ரணில் போன்றோரை மிகவும் பயமுறுத்திய போதிலும் அவரால் ஜனாதிபதி மகிந்தவை தனது காலில் பணிய வைக்க முடியவில்லை.

    படிப்பறிவில்லாத மனிதராக அவர் இருந்த போதிலும் ‘தமிழீழம்’ என்ற கோட்பாட்டிற்குள் புலம்பெயர் தமிழர்களின் முழுமையான கட்டுப்பாட்டைத் தன் கையில் வைத்திருந்தார்.

    ஓர் ராணுவ அதிகாரி என்ற வகையிலும், போரின் ஆரம்ப முதல் இறுதிவரை போராடியவன் என்ற வகையிலும் பிரபாகரனின் குணாதிசயங்களை என்னால் ஆராய முடிந்தது.

    இதன் பிரகாரம் பார்க்கையில் 8ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற ஒருவரால் இத்தனை சாதுரியமாக செயற்பட்டிருக்க முடியாது. அவர் சாமான்ய மனிதன் அல்ல.

    அவருக்கென தனித்தவமான குணங்களும், சாதுரியமும், தடையங்களும் இருப்பதை உணர்ந்தேன். சாமான்ய குடும்பத்தைச் சார்ந்த குடும்பத்தவராக இருந்திருப்பினும், கௌரவமான குடும்பத்தைச் சார்ந்தவர்.

    தனது 13 வது வயதில் கல்வியைக் கைவிட்டு அரசியல் தீவிரவாதத்திலிருந்த நம்பிக்கையே அரசியலில் அவரை இணைத்தது.

    பலருக்கு அவரைப்பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் ராணுவ அதிகாரி என்ற வகையில் எதிரியைப் பற்றி நன்கு அறிந்திருப்பதும் அவரது வெற்றிக்கும், தோல்விக்குமான காரணிகளை அடையாளப்படுத்துவதும் எனது பொறுப்பும், கடமையுமாகும்.

    இவ்வாறு ஆரம்பிக்கும் ‘பிரபாகரன்’ எனத் தலைப்பிடப்பட்ட இரண்டாவது அத்தியாயம் பிரபாகரன் என்ற மனிதனின் ஆளுமை, குணாதிசயங்கள் இளைஞர்களின் இனிய வாழ்வைத் தடுத்து, முக்கிய தலைவர்களைச் செயலற்றவர்களாக்கி, தேசத்தைப் பல தசாப்தங்களாக பயமுறுத்திய மனிதராகும்.

    அதே வேளை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் தமிழீழ ஆதரவாளர்களின் நாயகனாக எவ்வாறிருந்தார்? என்பதை வாசகர்கள் அறியவேண்டும் என்ற நோக்கமே இத் தலைப்பு என விபரிக்கப்பட்டுள்ளது.

    பொது மக்களில் பெரும்பான்மையோர் பிரபாகரனை படிக்காத போராளியாக  காணலாம். ஆனால் எனது பார்வையில் அவர் ஒரு தூர நோக்குள்ள மனிதராக இருந்துள்ளார்.

    இது அவரது இயல்பான தன்மையா? இக் குணாதிசயங்களை அவருக்கு அருகாமையில் இருந்தவர்கள் அவரை முழுமையாக அறிந்திருந்தார்களா? என்பது தெரியவில்லை.

    30 ஆண்டு காலப் போரில் அதிகமான தீர்மானங்களை அவர் மட்டுமே எடுத்தமையால் பலர் அவரைக் கடுமையாக விமர்ச்சித்திருக்கலாம்.

    ஆனால் அவரது இத் தீர்மானங்களே தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான புறச் சூழலைத் தருவதற்கான அடிப்படைகளாக அமைந்தன. அவரது தீர்மானங்களில் சில விகாரமாக அமைந்திருக்கலாம்.

    ஆனால் அவரது கருத்தின் பிரகாரம் பல தீர்மானங்கள் சரியாகவே இருந்தன.

    v-bhanu

    இறுதிப் போர்க் காலத்தில் அவரது முடிவுகள் பல தவறானவையாக இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் அவர் எடுத்த விவேகமான முடிவுகளே இயக்கத்தின் வளர்ச்சிக்கும், பிரச்சாரத்திற்கும் உதவின.

    போரின் இறுதிக் காலத்தில் அவர் அதிக அழுத்தங்களுக்குள், போர் முடிவை நோக்கிச் செல்வதை உணர்ந்த காரணத்தால் தவறான முடிவுகளை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறான கண்களுக்குத் தெரியாத மனிதனே.. ”இந்திய சமாதானப் படையினருக்கு இலங்கையை ஓர் நெப்போலியனின் ‘வாட்டலூ’ ஆகவும், அமெரிக்கர்களுக்கு  ஒரு வியட்நாம் ஆகவும், சோவியத் யூனியனுக்கு ஓர் ஆப்கானிஸ்தான் ஆகவும் மாற்றிய ஒருவராகும்.

    (அதாவது…மாபெரும் வெற்றிவீரன் நெப்போலியன் தோற்றது வாட்டர்லூ என்ற இடத்தில் இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் தன்னை ஒரு வல்லராக நினைத்துக்கொண்ட அமெரிக்க இராணுவம் வியட்னாமிய விடுதலைவீரர்களிடம் பேரடி வாங்கி தோற்றோடிப் போனது
    சோவியத் யூனியன் கூட அப்படித்தான். பொதுவுடைமையைப் பரப்புவதற்கு முயன்றபோது ஆப்கானியரிடம் பேரடி வாங்கியது. இப்படி உலக நாடுகளுக்கு இலங்கையின் ஒருவகை வீரம்மிக்க நாடாக எடுத்துக்காட்டியது பிரபாகரன்தான். )

    போரின் இறுதிக் காலத்தில் ராணுவத்தின் வெற்றிகளால் அவர் அமைதி அற்று இருந்திருக்கலாம். இறுதிக் காலத்தில் அவர் எடுத்த தீர்மானங்கள் குறிப்பாக தனது மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட முறை போரின் இறுதி முடிவை அறிவித்தன.

    இயக்கத்தினை இரத்தத்தினாலும், துன்பத்திலும், கண்ணீரிலும் தள்ளியமை என்பது அவரது வழமையான குண இயல்பு மாறியதை வெளிப்படுத்தியதோடு, இவ்வாறான கலந்துரையாடலற்ற, எதேச்சையான தீர்மானங்கள் புலிகளின் இறுதி முடிவை உணர்த்தின.

    இக் கொடுமை நிறைந்த போரின் ஆரம்பம் முதல் இறுதிப் போரின் ஆரம்பம் வரை அவருக்கு மிகவும் காத்திரமான, விவேகம் நிறைந்த உளவுத் துறையினரும், ஆலோசகர்களும் நல்ல வழிமுறைகளை வகுத்து வழங்கினர்.

    ஆனால் அவற்றை அவர் எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்தார்? என்பது சந்தேகமே.

    பலர் புலிகளின் மதியுரைஞரான பாலசிங்கம் போரின் தந்திரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார் என நம்புகின்றனர். ஆனால் என்னால் அதை நம்ப முடியவில்லை.

    Mr.-Anton-Balasingham-meets-Mr.-V.-Pirapaharan

    பிரபாகரனின் செயற்பாடுகள் யாவும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி  தனது பயங்கரவாத இயக்கத்தின் நோக்கங்களின் குரலாக்கி சர்வதேச சமூகத்தினதும், புலம்பெயர் மக்களினதும் ஆதரவைப் பெறவும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்தவும் பயன்படுத்தினாரே தவிர முடிவுகள் யாவற்றையும் தானே மேற்கொண்டார்.

    உதாரணமாக அவரது பெரும் நம்பிக்கைக்குரியவராக அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைக் குறிப்பிட முடியும். சர்வதேச அரசுகளின் முயற்சியால் மேற்கொண்ட சகல பேச்சுவார்த்தைகளும் முறிவடைந்தமைக்குக் காரணம் பிரபாகரனின் இறுமாப்பும், இறுக்கமான நிலைப்பாடுமாகும்.

    அவரே பெரும் சிந்தனையாளராக, திட்டமிடுபவராக, ராஜதந்திர வழிமுறைகளைத் தீர்மானிப்பவராக இருக்க, ஏனையோர் பின் தொடர்பவர்களாக செயற்பட்டனர்.

    அரசாங்கத்தின் உள் நோக்கங்களையும், திட்டமிடுதல்களையும், நிகழ்ச்சி நிரலையும் ஆராயும் திறன் கொண்டவராக அவர் காணப்பட்டார்.

    சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் குறித்து அவர் எடுத்த முடிவுகள் தனது இயக்கத்திற்கு வாய்ப்பானதாகவே அமைந்திருந்தன. சிங்கள மக்கள் நடந்த யாவற்றையும் ஒரு மாதத்திற்குள்  மறந்து விடுவார்கள் என அவர் ஒருமுறை பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

    நான் சிங்கள சமூகத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் அதனை முற்றாக முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். அவரது உள் எண்ணங்களின் தாக்கங்களை ராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, நிறைவேற்று அதிகாரத்தில், சட்டசபையில், நீதித்துறையில் உள்ளவர்கள் தனது இயக்கத்தின் இலக்கை அடைய அவர் வகுத்த வழிமுறைகளை ஆராய்ந்து அறிவது அவசியமானது.

    இன்னொரு விசேஷ குணாம்சம் என்னவெனில் ஒரு முறை தீர்மானத்தை எடுத்துவிட்டால் அது சரியோ, பிழையோ அல்லது ஆலோசகர்கள் எதிர்த்தாலும் அதனை நிறைவேற்றுவதில் காட்டும் தீவிரம் அலாதியானது.

    அவரது தீர்மானங்களில் இப் போக்கு மிகவும் அடையாளம் காணக்கூடியது. அவரது முடிவு எடுக்கும் போக்கு சர்வதேச சமூகத்தை அந்நியப்படுத்தும் எனத் தெரிந்திருந்தும் தனது முடிவை மாற்றாது நிறைவேற்றும் தன்மை என்பது முடிவு செய்தால் அது முடிந்த முடிவுதான் என்பதாகும்.

    ‘இலங்கையன்’ என்பதை நிராகரிப்பதால் எது இலங்கையைச் சார்ந்ததாக இருப்பினும் யாவற்றையும் நிராகரித்தார்.

    இது விடுதலைப்புலிகள் சரணடையும்போதும், புனர்வாழ்வு வழங்கிய போராளிகளின் செயற்பாடுகளிலும் வெளிப்பட்டது. அவர் இலங்கைத் தயாரிப்புகளை பயன்படுத்தாது தவிர்த்து பழவகை நீராகாரத்தைக்கூட இறக்குமதி செய்யப்பட்டதையே அருந்தினார்.

    இவரை விடுதலைப்புலிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகமே கடவுளாக எண்ணினர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு நல்ல வாழ்வை நோக்கிச் சென்ற ஒருவராவது அவரை விமர்ச்சித்துப் பேசியதில்லை.

    கருணா அம்மான் கூட பிரபாகரனைக் கடுமையான வார்த்தைகளால் விமர்ச்சித்ததில்லை. இன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாக கருதுவது  போலவே  அவருக்காக  தமது   உயிரை விடுவது   மிக உயர்ந்த தியாகம் எனக் கருதி அவரது பாதுகாப்பில் அதிக சிரத்தை எடுத்தார்கள். இவை அவர்கள் எவ்வளவு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தின.

    தமிழ் சமூகம் அவரைக் கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை.

    அவர் பிறப்பால் இந்து சமயத்தவராக இருந்த போதிலும், அவர் சமயத்தை அணுகியதில்லை. பொதுவாக இந்துக்கள் மரணித்தால் எரிப்பார்கள்.

    ஆனால் தனது இறந்த சக போராளிகளைப் புதைக்கும்படி உத்தரவிட்டார். இது இந்து நெறிக்கு முரண்பட்டதாகும். அவர் தன்னை மட்டுமே நம்பினார்.

    தன்னை இன்னொரு இந்துக் கடவுளாக உருவகப்படுத்தும் நோக்கில்தான் மத நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் நடந்துகொண்டார்.

    ஒரு முறை அவரிடம் கடவுள் நம்பிக்கை உண்டா? என வினவியபோது நான் கடவுளை நம்புவதில்லை.

    அது அணுக்குண்டு வைத்திருக்கும் பலமுள்ள நாடுகளுக்குப் பொருந்தும் என்றார்.

    ஆனால் அவரது மத நம்பிக்கைகள் யாவும் ஆயுதங்கள், வன்முறைகள் மீதே இருந்தன. இன்றும்கூட அவருக்கு அண்மையிலிருந்து காவல் காத்த போராளிகளும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களும் கடவுளை இன்னமும் நம்புவதில்லை.

    அவர்களின் கடவுள் பிரபாகரன் மட்டுமே. அவருக்கு நெருங்கிய பாதுகாப்பை வழங்கிய பலர் அனாதைகளாகும். அவர்களைத் தனது இறக்கைக்குள் எடுத்து மூளைச் சலவை செய்ததன் விளைவே இதுவாகும்.

    இப் போராளிகள் வெவ்வேறு அணிகளின் தலைவர்களான கருணா, சூசை, பானு, ரத்னம் மாஸ்ரர் போன்றோரின் கீழ் செயற்பட்டிருந்தாலும் பிரபாகரனே சகல பிரிவுகளையும் இணைக்கும் பசையாக இருந்துள்ளார்.

    அவருக்கு நீரிழிவு வியாதி இருந்த போதிலும் இனிப்புகளை விரும்பிப் புசிப்பார். ஆனால் எந்தப் போராளியும் அது உடலுக்குக் கூடாது என ஆலோசனை கூற முடியவில்லை.

    இயக்கத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற கோஷத்தை அவர்கள் மாற்றவே இல்லை.

    அதுவே பலரை மாற்றுவதற்கான பிரதான மந்திர சக்தியை வழங்கியது. அந்த இயக்கத்தில் இணைவதற்கான சத்தியப் பிரமாணமாக பின்வரும் வாக்கியங்கள் இருந்தன.

    ‘எங்கள் புரட்சிகர இயக்கத்தின் பிரதான நோக்கமான தமிழீழத்தை உருவாக்க எனது வாழ்வைத் தியாகம் செய்வதாக சத்தியம் செய்கிறேன்.  எனது தலைவர்  பிரபாகரன் அவர்களின்  சகல உத்தரவுகளையும் நிறைவேற்றுவதோடு அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் எனவும், நான் இன்று முதல் பயிற்சி பெற தயாராக உள்ளேன் எனவும் தெரிவிக்கிறேன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ இவ் வாசகம் தினமும் காலையில் பயிற்சியின்போது பலத்த குரலில் இயக்கத்தின் ஒவ்வொரு போராளியும் கூறவேண்டும்.

    Untitled-17

    பிரபாகரன் ஓர் பயமற்ற போராளி என பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்கள் நம்புகின்றனர். அது அப்படியல்ல.

    அவர் தனது நெருங்கிய சகாக்களையும், குடும்பத்தினரையும் தவிர ஏனையோர் குறித்து சந்தேகத்துடனும், பயத்துடனுமே நீண்ட காலம் வாழ்ந்தார்.

    அதனால் அவர் தன் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தினார். அவர் தனது உயிருக்காக மட்டுமல்ல, தனது பதவிக்கும், இயக்கத்தில் தனக்குக் கிடைத்துள்ள அந்தஸ்துக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் இருந்ததால் சகல ஆபத்துக்களையும் சமாளிப்பதிலும் அவரது கவனம் சென்றது.

    இதன் காரணமாக இலங்கையின் சகலரையும் வயது, இனம், மதம், பால் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் பய நிலையில் குறிப்பாக தேசத்தின் தலைவர்களையும் அவர்களின் வீடுகளிலேயே சிறைக் கைதிகள் போல் இருக்க வைத்தார்.

    ஓவ்வொரு இலங்கையனையும் பயத்திற்குள் தள்ளியது போலவே, தானும் தன்னால் ஏற்படுத்தப்பட்ட பயத்தின் காரணமாக ஆயுததாரிகளின் பாதுகாப்பிற்குள் ஒரு கைதியாகவே வாழ்ந்தார்.

    தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது அவர் மிக விசேட அவதானத்தில் இருந்தார். இத்தனை பாதுகாப்புகளையும் தனது சகாக்களின் ஆலோசனை அடிப்படையில் மேற்கொண்டாரா? அல்லது தனது வாழ்வின் மீதான அதீத விருப்பத்தின் காரணமாக ஏற்படுத்தினாரா? என்பது தெரியவில்லை.

    ஈழத்திற்காக தன்னுடன் இணைந்து போராடிய ஏனைய இயக்கங்களினால் தனக்கு ஆபத்து உண்டு என்பதை நன்கு தெரிந்திருந்தார்.

    ஏனெனில் தாமே அதி உயர் தலைவர் என்பதை உறுதி செய்ய ஏனையோர் மீது கடும் தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்திருந்தார்.

    அத்துடன் ராணுவ உளவுப் பிரிவினர் குறித்து அவர் அதீத கற்பனையில் இருந்தமையால் அவர்களாலும் ஆபத்து உண்டு எனவும் எண்ணியிருந்தார்.

    இதன் காரணமாக அடிக்கடி இடம் மாறுவதும், மக்கள் மத்தியிலே வெளிப்படாமலும் வாழ நேர்ந்தது. இதனால் தனது மிகவும் நம்பிக்கைக்குரிய சில தோழர்களை மட்டுமே சந்தித்தார்.

    அவர் தன்னைச் சுற்றிப் போட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் ராணுவம் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எண்ணியிருக்கவில்லை.

    main-qimg-248eb54a4e4bb0331adc24eedcb100b2-cராணுவ உளவுப் பிரிவின் மிகச் சரியான தகவல்களின் அடிப்படையில், எமது புத்தி சாதுர்யமிக்க விமான ஓட்டிகள் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை மிகச் சரியாக குறி வைத்துக் கொன்றனர்.

    ஆனால் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து தகவல்கள் கிடைப்பின் அத் தகவல்களின் உண்மைத் தன்மையை எமது திட்டமிடுதல்களின்போது ஆராய்வோம்.

    பிரபாகரன் தனது மறைவிடம் தொடர்பாக மேற்கொண்ட தீர்மானங்கள் நாம் அவரின் இருப்பிடம் குறித்து சரியான தகவல்களைப் பெற்றோம் என நான் நம்பவில்லை.

    சுருங்கக் கூறினால் ராணுவத்தின் திறனை அவர்  அதிகளவு உயர்வாக கணித்திருந்தார். அவரது கணிப்புச் சரியாக இருந்திருப்பின் போர் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்து பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

    போர் இடம்பெற்ற வேளையில் புலிகளின் வானொலியில் முக்கிய தலைவர்களின் உரையாடல்களை நாம் செவிமடுத்தோம். தலைவர்களான கருணா, சூசை, பானு, சுவர்ணம், பொட்டு அம்மான், தீபன் போன்றோரின் குரல்கள் எமக்கு மிகவும் பரிச்சயமாகின.

    ஆனால் நாம் பிரபாகரனின் குரலைக் கேட்டதில்லை. அவர் பேசும்போது அவரது இருப்பிடத்தை நாம் துல்லியமாக அறியக்கூடிய உபகரணங்களை வைத்திருக்கலாம் என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார்.

    தமிழ்ச்செல்வன் மீதான சரியான தாக்குதல்கள் அவரது பாதுகாப்பின் மேல் மேலும் கவனம் செலுத்த வைத்தது. அவரது நிலத்தடி பதுங்கு குழி நான்கு அடுக்குகளைக் கொண்டதாகவும், அது புதுக்குடியிருப்பின் தென் பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

    இதன் வடிவமைப்பு அவர் தனது உயிர்ப் பாதுகாப்பில் எடுத்துள்ள கவனத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

    பல உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயற்சித்த போதிலும் மிகச் சிலரே அந்த அரிய வாய்ப்பைப் பெற்றனர். அவர்களில் நோர்வே நாட்டின் அரசியல் தலைவர்களே அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற அதிர்ஸ்டசாலிகள்.

    இவற்றிற்குப் பாதுகாப்பு காரணிகளே பிரதானமாக அமைந்தன. அவரைச் சந்திக்க வாய்ப்புப் பெற்றவர்கள் உலகம் முழுவதிலும் பரந்த அறிமுகத்தையும் பெற்றனர்.

    தொடரும்

    தொகுப்பு : வி. சிவலிங்கம்

    ( உத்தரவுடன் பிரதி செய்தல் நல்லது)
    (Copy right reserved)
    news@ilakkiyainfo.com

    (முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!! பகுதி-1)- வி.சிவலிங்கம்

    Post Views: 9

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    கச்சதீவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு அந்தோனியார் ஆலய தள பரிபாலகர் கோரிக்கை

    March 25, 2023

    கட்டார் தலைநகர் தோஹாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் பலி

    March 25, 2023

    புலஸ்தினிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை

    March 22, 2023

    Leave A Reply Cancel Reply

    February 2020
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    242526272829  
    « Jan   Mar »
    Advertisement
    Latest News

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ

    March 25, 2023

    “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

    March 25, 2023

    இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது

    March 25, 2023

    14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை; இளைஞன் தலைமறைவு

    March 25, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
    • ஆள் உயர கரடியிடம் சிக்கிய இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்; வைரலான வீடியோ
    • “தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்
    • இலங்கையில் 1 கோடி பேரின் உணவு வீணானது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version