ஈரானில் மது அருந்­தினால் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் அழிக்­கப்­படும் என்ற வதந்­தியை நம்பி, சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்­திய 27 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

ஈரானில் வாழும் இஸ்­லா­மிய மக்கள் மது அருந்த பரி­பூ­ரண தடை விதிக்­கப்பட்டுள்­ளது. ஆனால், பிற­ம­தத்­தி­ன­ருக்கு மட்டும் அனு­மதி உண்டு.

 

கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் ஒன்­றாக ஈரான் உள்­ளது.

ஈரானில் 237 பேர் கொரோன வைர­ஸினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். அந்­நாட்டில் 7161 பேருக்கு இத்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, மது அருந்­தினால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் தப்­பு­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது என்ற வதந்­தியை நம்பி ‘மெதனோல் எனும் எரி­சா­ராயம் கலந்த மதுவை அருந்­திய 27 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

இவர்­களில் 20 பேர் ஈரானின் வட­மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகா­ணத்­தையும் 7 பேர் அல்போர்ஸ் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply