ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருப்போரை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியன்றும் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தால் , உங்களதும் சமூகத்தினது நலனுக்காகவும் , அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள்.

இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அறிவிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply