உலக சுகாதார அமைப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதராரங்களின் அடிப்படையில், 197,000 க்கும் அதிகமானோர் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7,900 ஐயும் கடந்துள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனா:
சீனாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 13 பேர் மாத்திரம் புதிய கொரோனா தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு சென்றவர்கள் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் வரை சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றினால் மொத்தமாக 80,894 கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,237 ஆக பதிவாகியுள்ளது.
இத்தாலி நேற்றைய தினம் 3,526 புதிய கெரோனா தொற்று நோயாளர்களை அறிவித்தது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,506 ஆக உயர்வடைந்துள்ளது. அதே நேரம் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,503 ஆக காணப்படுகிறது.
ஈரான்:
ஈரான் நேற்றைய தினம் 1,178 புதிய கொரோனா தொற்று நோயாளர்களை அறிவித்தது. இதன் மூலம் அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் 16,169 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்காவின் தற்போது 50 மாநிலங்களைச் சேர்ந்த 5,359 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேநேரம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 100 ஐ எட்டியுள்ளது.