நள்ளிரவில் தனியாக கழிவறைக்கு வந்த சிறுமியிடம் டிவி பார்க்கலாமா என்றுகூறி வீட்டுக்கு அழைத்துச் சென்ற வாலிபர், அவரை 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்

சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமி, நள்ளிரவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சிறுமி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சுரேஷ் (29) என்பவரைக் கைது செய்துள்ளனர்.

சுரேஷ் போலீஸாரிடம் சிக்கியது எப்படி என்று மதுரவாயல் போலீஸார் நம்மிடம் கூறுகையில், “10 வயது சிறுமி, தன்னுடைய பெற்றோருடன் முதல் மாடியில் குடியிருந்து வந்தார். இவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுமியின் தந்தை பானிப்பூரி கடையில் வேலை செய்துவருகிறார். சிறுமி, அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார்.

சிறுமி குடியிருக்கும் வீட்டின் 2வது தளத்திலும் முதல் தளத்திலும் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு தளத்தில் உள்ள வீடுகளுக்குக் கழிவறை வீட்டின் வெளியில் உள்ளது.

யளனநஅதனால்தான் நேற்றிரவு சிறுமி, வீட்டின் கதவைத் திறந்துகொண்டு கழிவறைக்குச் செல்ல வெளியில் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகள் வரவில்லை என்றதும் சிறுமியின் தாய் அவரைத் தேடி கழிவறைக்கு வந்துள்ளார்.

அங்கும் சிறுமி இல்லை. அதன்பிறகே அவர், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களுக்குத் தகவல் தெரிவித்து சிறுமியை டார்ச் லைட் வெளிச்சத்தில் தேடினர். பிறகு மதுரவாயல் காவல் நிலையத்துக்கு  தகவல் தெரிவித்தனர்.

மொட்டை மாடிக்குச் சென்று சிறுமியைத் தேடியபோது வீட்டின் பின்புறப் பகுதியில் உள்ள தென்னை மரத்தின் அருகே டார்ச் லைட் அடித்துப் பார்த்தோம்.

அங்கு சிறுமி ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தோம். அதன்பிறகு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.

பின்னர் சம்பவ இடத்தில் சிறுமியின் மரணம் குறித்து விசாரித்தபோது 2-வது மாடியில் தனியாகத் தங்கியிருந்த சுரேஷ் மீது எங்களுக்குச் சந்தேகம் வந்தது.

இதையடுத்து சுரேஷிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறினார். அடுத்து சுரேஷின் செல்போனை ஆய்வு செய்தோம்.

அப்போது அதில் சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதுதொடர்பாக விசாரித்தபோது `நள்ளிரவில் தூக்கம் வராததால் வீட்டுக்கு வெளியில் நின்றபடி செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் சிறுமி தனியாக கழிவறை வந்ததைப் பார்த்தேன். உடனே அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். டிவி பார்க்கலாமா என்றுகூறி என்னுடைய வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்றேன்.

வீட்டுக்குள் சென்றதும் கதவைப் பூட்டிவிட்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றேன். ஆனால் சிறுமி, சத்தம் போட தொடங்கினார். உடனே அவளின் வாயைப் பொத்தினேன்.

இதில் மூச்சுத்திணறி அவள் மயங்கிவிட்டாள். மயக்கம் தெளிந்த பிறகு என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள் என்று கருதினேன். உடனே சிறுமியைத் தூக்கிக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

3வது மாடியிலிருந்து சிறுமியைத் தூக்கிக் கீழே வீசினேன். பின்னர் எதுவும் நடக்காது போல வீட்டில் வந்து படுத்துக்கொண்டேன்.

ஆனால் தூக்கம் வரவில்லை’ என்று கூறினார். இதையடுத்து சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தோம்” என்றனர்.

சிறுமி

சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரவாயல் பகுதிக்குக் கட்டட வேலைக்காக வந்தார். அப்போது, அவருடன் பெண் ஒருவரும் வந்துள்ளார்.

கணவன் மனைவி என்றுகூறி இருவரும் சிறுமியின் வீட்டின் 2-வது மாடியில் தங்கினார். சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

அதனால் சுரேஷ் மட்டும் தனியாக தங்கியிருந்தார். சுரேஷின் சொந்த ஊர் திருவண்ணாமலை என்ற தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

`சென்னை குன்றத்தூர் பகுதியில் தஷ்வந்த் என்ற இளைஞர் அவரின் வீட்டின் பகுதியில் குடியிருந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.

அதைப்போலதான் மதுரவாயலில் தங்கியிருந்த 10 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்கின்றனர் போலீஸார்.

Share.
Leave A Reply