அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடையப்போகின்றது என அந்த நாட்டின் தொற்றுநோய்கள் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்டொனி பவுசி தெரிவித்துள்ளார்
பொக்ஸ் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நிலைமை மோசமடையப்போகின்றது, மிகமிகமோசமாகப்போகின்றது அதன் பின்னரே நிலைமை மாறத்தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு சமூக விலக்கலே ஒரே வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடல் ரீதியான தனிமைப்படுத்தல்கள் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட சமூக விலக்கல் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அமெரிக்க மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் 19ற்கு எதிராக போராட்டத்தில் மலேரியா மருந்து பலனளிக்கும் என உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலதிக ஆய்வுகள் அவசியம் என அன்டொனி பவுசி தெரிவித்துள்ளார்.