இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த 14 பேரில் சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேசமயம் கிளிநொச்சி, முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு 2ஆம் கட்ட பரிசோதனையும் கிளிநொச்சி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு முதலாம் கட்டப் பரிசோதனையுமாக இன்று மொத்தமாக 24 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது.

அவர்களில் 12 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில் யாழ்.மாவட்டத்தில் நோயாளர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 56 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply