கனடாவில் போலீஸ் உடையில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அப்போது, அங்கு போலீஸ் வாகனத்தில் போலியாக காவலர் போல உடை அணிந்து கெப்ரியல் வார்ட்மென் என்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய கேப்ரியலை கைது செய்தனர்.

Share.
Leave A Reply