லொக்டவுண் வேளையில் ஆடம்பர போர்ஷ (Porsche) காரில் ஊரைச் சற்றுவதற்குப் புறப்பட்ட ஓர் இளைஞனை இந்திய பொலிஸார் வீதியில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இந்துதூர் நகரில்இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஞ்சள் நிறமான போர்ஷ (Porsche) ஆடம்பர காரில் மேற்படி இளைஞன் சென்றுகொண்டிருந்ததை இந்தூர் நகரின் பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்கள் அவதானித்தனர்.

இராணுவம், துணைப்படையினர், பொலிஸார், மற்றும் தொண்டர்கள் இப்பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காரை நிறுத்தியதுடன், ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தமைக்கான காரணத்தை வினவினர்.

20 வயதான மேற்படி சாரதி, இந்தூர் நகரின் வர்த்தகர் ஒருவரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி இளைஞனுக்குத் தண்டனையாக, அவரை வீதியில் தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் கூறினர்.

பொலிஸாரின் உத்தரவுப்படி, அந்த இளைஞன் தோப்புக்கரணம் போடும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply