இந்தியா: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற 16 வயது மாணவியொருவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் கண்ணை மூடிக் கொண்டு எழுதும் திறமையுடையவரெனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறு வயது முதலே தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வரும் குறித்த மாணவி நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஒரு கையில் ஆங்கில மொழியிலும், மற்றொரு கையில் கன்னட மொழியிலும் எழுதக் கூடியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மாணவியால் ஒரே நேரத்தில் நேராகவும், கண்ணாடி பிம்ப முறையிலும் இலகுவாக எழுத முடியும் எனவும் கூறப்படுகின்றது.
இந் நிலையில் இம் மாணவியின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதோடு இது குறித்து வெளியான வீடியோவொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ (மூலம்- Polimer News)