ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விதம் விதமாக வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர்.
அதில், ‘ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது தந்தையின் அபூர்வ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பழமையான கார் ஒன்றின் அருகில் ரஜினி குர்தா அணிந்து அந்த படத்தில் காட்சி அளித்தார். இந்த கார் தான் ரஜினி வாங்கிய முதல் கார் ஆகும்.
இன்று ரஜினியிடம் பல நவீன சொகுசு கார்கள் இருந்தாலும் அந்த முதல் காரை இன்றும் அவர் பாதுகாத்து வருகிறார்.
ரஜினி வந்த பாதையை மறக்காதவர். பழமையை என்றும் தனது நினைவில் கொண்டிருப்பவர். பழமை காலத்தில் தன்னோடு இருந்தவர்களை மதிப்பவர் என்பதை உணர்த்தும் வகையில் அந்த படம் அமைந்திருந்தது.
ஐஸ்வர்யா வெளியிட்ட அந்த படத்தை பல்லாயிரக் கணக்கானோர் மறுபதிவாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply