காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயில் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று (02) 24 ஆவது நாளாக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து குறித்த பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த பகுதியில் இதுவரை எவ்வித வன்முறைகள் இடம்பெற்றதாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை.
இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.