நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன் நாளை (14) மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply