ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, July 2
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்
    இந்தியா

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    AdminBy AdminMay 27, 2022No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியின் கொடூர தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக பாசக்கார கணவர் ஒருவர் கோர்ட்டு படியேறி இருக்கும் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வரும் அஜித்சிங் அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    காதல் திருமணம் அஜித்சிங்குக்கு இனிமையானதாக அமையவில்லை. திருமணத்துக்கு பின்னர்தான் சுமன் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோபப்பட்டு கையில் கிடைப்பதை தூக்கி கணவரை தாக்க தொடங்கினார் சுமன்.

    ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அஜித்சிங் போக போக சரியாகி விடும் என்று எண்ணினார். ஆனால் ஒவ்வொரு நாளும் மனைவி சுமனின் தாக்குதல்கள் வித விதமாக கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது.

    ஒருநாள் பூரிக்கட்டை தாக்குதல் என்றால் மறுநாள் கரண்டி அடி. அதற்கு அடுத்த நாள் கிரிக்கெட் மட்டையால் தாக்குதல் என ஒவ்வொரு நாளும் சுமன் சிக்சர்களை பறக்க விட்டார்.

    கணவரை அடிக்க தொடங்குவதற்கு முன்னதாக சுமன் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொள்வார். பின்னர் கணவர் அஜித்சிங்கை வீட்டுக்குள்ளேயே ஓட ஓட விரட்டி வெறித்தனமாக தாக்குதல் நடத்துவார். இப்படி ஒவ்வொரு நாளும் மனைவியின் தாக்குதலில் அஜித்சிங் பலத்த காயம் அடைவதும், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவதும் தொடர் கதையாகவே மாறி உள்ளது.

    கணவரை அடிக்க கையில் ஏதும் கிடைக்காவிட்டால் சுமன் என்ன செய்வார் தெரியுமா? கணவரின் தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொள்வார். பின்னர் தலையை பலமாக சுவற்றில் மோத விட்டு தாக்குதலில் ஈடுபடுவார். இப்படி மனைவி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி தன்னை தினமும் அடித்து உதைத்து துவைத்து எடுத்த போதிலும் கணவர் அஜித்சிங்கோ எந்த சூழ்நிலையிலும் எதிர் தாக்குதலை நடத்தியது இல்லை.

    திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒவ்வொரு நாளும் மனைவியிடம் அடி வாங்கிய அஜித்சிங் இதுபற்றி போலீசிலும் புகார் அளித்துள்ளார். அப்படி புகார் செய்தால் போனசாக தாக்குதல்களை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளார் சுமன்.

    இப்படி அடிதாங்க முடியாமல் ஒவ்வொரு நாளையும் கழித்த அஜித்சிங் மனைவியின் தாக்குதல் காட்சிகளை பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு செய்தார். இதன்படி வீட்டில் கேமராக்களை பொறுத்தி தான் அடி வாங்கும் காட்சிகளை பதிவு செய்தார்.

    In a strange case of domestic violence, a school principal in #Alwar district of #Rajasthan has move the court seeking protection from the physical and mental harassment of his wife.

    According to the man, his wife has been beating him black and blue leaving him weak mentally. pic.twitter.com/J1UOmRhyHw

    — IANS (@ians_india) May 25, 2022


    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோர்ட்டில் இந்த வீடியோ காட்சிகளுடன் அஜித்சிங் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், “மனைவியின் அடி தாங்க முடியவில்லை. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.

    அஜித்சிங் அடி வாங்கும் வீடியோக்களை பார்த்த நீதிபதி, அஜித்சிங்கை பார்த்து இவ்வளவு அடி வாங்குகிறீர்களே, ஏன் திருப்பி அடிக்கவில்லை? என்று கேட்டுள்ளார்.

    இதற்கு பரிதாபத்துடன் பதில் அளித்த அஜித்சிங் காதல் மனைவியை எனக்கு அடிக்க தோன்றவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அஜித்சிங் மேலும் கூறும்போது,நான் ஒரு தலைமை ஆசிரியர். கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மனைவியின் அடி-உதை சித்ரவதைகளை பொறுத்துக் கொண்டேன்.

    இதுநாள் வரை காதல் மனைவி என்னை எத்தனையோ முறை தாக்கி இருக்கிறார். ஆனால் அடிப்பதற்கு என்று எனது விரல் கூட அவள் மீது பட்டது இல்லை என்று தெரிவித்துள்ளார். அஜித்சிங்கின் நிலைமையை புரிந்து கொண்ட நீதிபதி அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    இனியாவது அஜித்சிங்குக்கு அடி விழாமல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Post Views: 84

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ

    June 29, 2022

    படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்

    June 27, 2022

    கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    May 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

    July 2, 2022

    முல்லைத்தீவு : கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

    July 2, 2022

    இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?

    July 2, 2022

    தனது 2 பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு

    July 2, 2022

    மட்டக்களப்பு வலையிறவு ஆற்றுக்குள் பாய்ந்த லொறி

    July 2, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை
    • முல்லைத்தீவு : கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா
    • இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?
    • தனது 2 பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version