நியூசிலாந்தில் இருக்கும் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸிமேனா நெல்சன், “ஒரு நெகிழி மூடியைப் போன்ற ஒரு பொருளை, கூரையின்மீது ஸ்னோபோர்டாக பயன்படுத்தி பனிச்சறுக்கு செய்த ஒரு காகத்தின் காணொளி தான் எனக்கு மிகவும் பிடித்தது,” என்று நினைவு கூர்கிறார்.

ஸிமேனா மேற்கோள் காட்டிய காணொளி, ரஷ்ய நகரத்திலுள்ள கட்டடத்தின் ஜன்னல் வழியாகப் பதிவு செய்யப்பட்டது. காகம் ஒரு நெகிழி மூடியில் நின்று பனிக் கூரையில் கீழே சரிந்து சென்றது. அது மீண்டும் மேலே பறந்து சென்று மீண்டும் அதைத் தொடர்ந்து செய்தது. அதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில், ஒரு கருவியைப் பயன்படுத்தும் காகத்தின் அறிவுக்கூர்மையை அந்தக் காணொளி காட்டுகிறது.

“அது விளையாடும் அதேநேரத்தில், ஒரு கருவியைப் புதுமையாகவும் பயன்படுத்துகிறது. இதில் வேடிக்கைக்காக ஒரு கருவியைப் பயன்படுத்து ஓர் உதாரணம் தான்.

அந்த காகம் எவ்வளவு புத்திசாலி என்பதைப் பற்றி அது நிறைய விவரங்களைக் கொடுக்கிறது. மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் புதுமைகளை உருவாக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்று கூறுகிறார் ஸிமேனா.

பல மணிநேரங்களைச் செலழித்து காகங்களைப் புரிந்துகொள்ள முயலும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களுக்கு இத்தகைய நடத்தையை காணொளி ஆதாரமாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதையும் தாண்டி, அதை நேரடியாகப் பார்க்கக் கூட முடியாமல் போகலாம் என்று குறிப்பிடுகிறார் ஸிமேனா.

மற்ற உயிரினங்களோடு அல்லது அசாதாரண பொருட்களோடு “காட்டுயிர்கள் விளையாடுவதைப் போன்ற” காணொளிகள் இணையத்தில் பிரபலமானவை.

உயிரினங்களின் விளையாட்டு போன்ற வேடிக்கையான காணொளிகள் பொழுதைப் போக்க ஏற்றவையாக இருந்தாலும், இத்தகைய காணொளிகளில் இருக்கும் உயிரினங்களின் செயல்பாடுகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும்.

அவை எதற்காக விளையாடுகின்றன எனபதற்கு எந்தவித வெளிப்படையான நோக்கமும் இல்லை. ஸிமேனா சொல்வதைப் போல், “இந்தச் செயல்பாடு அவற்றுக்கு உணவிலோ அல்லது இனப்பெருக்கத்திலோ பங்கு வகிக்கப் போவதில்லை.”

Share.
Leave A Reply