நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய கரு ஜயசூரிய, “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான கடமையாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க முன்னுரிமை வழங்க வேண்டும்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் பிரச்னைகளுக்கு 20 ஆவது திருத்தமே காரணமாகும். அதனால் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply