நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர்.

காட்மாண்டு நேபாளத்தில் நடந்த திருமண சடங்கு குறித்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் தங்கள் திருமண விழாவில் மேடையில் வைத்து சண்டை போட்டுகொண்டனர்.

பாரம்பரிய திருமண உடையில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பதுடன் வீடியோ தொடங்கு கிறது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கைத் தொடங்கியவுடன், அவர்கள் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தள்ளுவதும் இழுப்பதும் நடந்தது.

தொடரந்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ 70,000க்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

பார்வையாளர்களிடமிருந்து கலவையான கருத்துக்களை பெற்று உள்ளது.

Share.
Leave A Reply