மம்மூட்டி இலங்கைக்கு சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார் என வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது பற்றிய உண்மை இதோ.
மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருபவர் மம்மூட்டி. அவர் தமிழிலும் அதிக படங்கள் நடித்து இருக்கிறார்.
தற்போது அவர் Kadugannava Oru Yathrakurippu என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்மூட்டி சமீபத்தில் இலங்கைக்கு சென்ற போது அவர் அவமானப்படுத்தப்பட்டதாக இணையத்தில் ஒரு வீடியோ பரவியது.
ஏர்போர்ட்டில் மம்மூட்டி நின்றிருக்க, அவரை அழைத்து செல்ல வந்த நபர் தாமதமாக வருகிறார். அதன் பின் போர்டை தூக்கிகொண்டு உள்ளே போகிறார்.
´நான் தான்´ என அந்த நபரை நிறுத்துகிறார் மம்மூட்டி. அதன்பின் ஒரு பழைய மாருதி 800 காரில் அவரை அழைத்து செல்கிறார் அந்த நபர்.
மம்மூட்டி அவமானப்படுத்தப்பட்டதாக அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
ஆனால் உண்மை என்னவென்றால் அந்த வீடியோ Kadugannava Oru Yathrakurippu படத்தின் ஷூட்டிங்கின் போது அருகில் யாரோ ஒருவர் எடுத்து வெளியிட்டதாகும்.
ஷூட்டிங் வீடியோவை தவறாக இணையத்தில் இப்படி பரவ விட்டிருக்கின்றனர்.