வவுனியா – ஏ9 வீதி, தேக்கவத்தை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து 97 ஆடுகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற பாராவூர்தியும், வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

விபத்தையடுத்து பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கொண்டு செல்லப்பட்ட 97 ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணையின் பின் சாரதியையும், ஆடுகளையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply