• பங்களா வீட்டில் ஆண் நண்பர்களுக்கு கல்லூரி மாணவிகளின் ‘படுக்கை விருந்து’  அஜிதா • குளச்சல் பகுதியில் ஒரு பங்களா வீட்டில் தோழிகளை அழைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதாக தகவல் கிடைத்து உள்ளது.

• மோட்டார் சைக்கிளில் அங்கு விரைந்த சஜின் குறிப்பிட்ட பங்களா வீட்டுக்குள் சென்றதும் அங்கு அரங்கேறி கொண்டிருந்த கூத்துக்களை பார்த்து வெறுத்துப் போயிருக்கிறார்.

வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா! என்னை மட்டுமே நம்பாதே! என்னைப்போல் நீயும் வாழ்க்கையை என்ஜாய் பண்ண பழகிக்கோடா..

. -பள்ளி முதல் கல்லூரி வரை 6 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த காதலி இப்படி ஒரு வார்த்தையை காதலனிடம் சொன்னால் அவன் நிலை எப்படி இருக்கும்?

நிலைகுலைந்து போயிருக்கிறான் அந்த அப்பாவி காதலன். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் சுல்தான் கடை பகுதியை சேர்ந்த மாணவர் சஜின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் 18 வயது முடியவில்லை.

குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பள்ளியில் ஒன்றாக படித்தபோதே சஜின் காதலித்துள்ளார்.

பள்ளிப்பருவ காதல் கல்லூரி வரை தொடர்ந்தது. சஜினும் அஜிதாவும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சுற்றி நெருக்கமான தங்கள் காதலை இறுக்கமாக்கி வந்தார்கள்.

பருவம் கல்லூரி பருவமாக மாறியதும் அஜிதாவின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தன் தோளில் சாய்ந்து வந்த அஜிதா வேறு சிலரது தோளில் சாய்ந்தபடி பயணித்ததை பார்த்த சஜின் கண்டித்துள்ளார்.

மேலும் சக நண்பர்களால் அரசல் புரசலாக காதில் கேட்ட தகவல்களால் ஆத்திரமடைந்த சஜின் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என்று சத்தம் போட்டுள்ளார்.

அதற்குத்தான் “வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா! என்னை மட்டுமே நம்பாதே! என்னைப் போல் நீயும் என்ஜாய் பண்ண பழகிக்கோ…” என்று சொல்லி தனது காதல் பாதை இப்படித்தான் இருக்கும். முடிந்தால் தொடர்ந்து வா. இல்லாவிட்டால் விட்டு விலகு என்பது போல் கூறி இருக்கிறார்.

ஆறு ஆண்டாக கட்டிய காதல் கோட்டை உடைந்து நொறுங்கியதால் சஜினும் மனம் உடைந்து போனார்.

இந்த நிலையில் அஜிதா குளச்சல் பகுதியில் ஒரு பங்களா வீட்டில் தோழிகளை அழைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதாக தகவல் கிடைத்து உள்ளது.

மோட்டார் சைக்கிளில் அங்கு விரைந்த சஜின் குறிப்பிட்ட பங்களா வீட்டுக்குள் சென்றதும் அங்கு அரங்கேறி கொண்டிருந்த கூத்துக்களை பார்த்து வெறுத்துப் போயிருக்கிறார்.

நான்கைந்து கல்லூரி மாணவிகள், அவர்களுடன் நான்கைந்து மாணவர்கள் எல்லோரும் போதை தலைக்கேறி அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் பாட்டம் என்று கும்மாளம் போட்டுள்ளனர்.

அதைப் பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற சஜின் அங்கிருந்த ஆண்களை அடித்து விரட்டி இருக்கிறார்.

அஜிதாவின் கன்னம் பழுக்க பளார்… பளார் என்று வெளுத்து இருக்கிறார். மறுநாள் மகளின் வீங்கி சிவந்த கன்னத்தை பார்த்து பெற்றோர் விசாரித்தபோது பிறந்தநாள் விழா கொண்டாடியதாகவும், அப்போது சஜின் அவனுக்கு பிடிக்கவில்லை என்று கூறி அடிவிட்டதாக கூறி இருக்கிறார்.

காயங்களும் இருந்ததால் பெற்றோர் அஜிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு குளச்சல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட பங்களா வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

ஆட்கள் வசிக்காத பங்களா. இங்கு ஏன் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்? என்ற சந்தேகத்துடனேயே வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்கள்.

அங்கு பார்த்த காட்சிகள் போலீசை அதிர வைத்தது. கிழித்து வீசப்பட்ட ஆடைகள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், தம்ளர்கள், ஆணுறைகள், நொறுக்கு தீனிகள்… இது சாதாரண பார்ட்டி அல்ல.

மது விருந்து. அதையும் தாண்டி பலான விசயங்களும் நடந்திருக்கும் போலிருக்கே… ஆரம்பத்திலேயே தட்டிதூக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும் என்று கருதிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்போது பார்ட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு செல்போன்களில் ‘கான்செப்ட்… சரக்கு பார்ட்டி… ஜாயின்ட்’ என்ற சங்கேத வார்த்தைகள் பரிமாறப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அதுபற்றி விசாரித்த போது மது விருந்து நடக்கிறது கலந்து கொள் என்பதாம். அந்த விருந்தில் மது குடித்து உல்லாசமாக ஆட்டம் போடுவார்களாம்.

பின்னர் தங்கள் ஆண் நண்பர்களுக்கு பெண் தோழிகள் படுக்கை விருந்து வைப்பார்களாம்.

இப்படி பலமுறை நடந்து இருக்கிறதாம். அதை கேள்விப்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மிகப்பெரிய நகரங்களில் தான் இந்த மாதிரி கலாச்சார சீரழிவுகள் நடக்கும் என்பார்கள். ஆனால் இப்போது இங்கும் வந்துவிட்டதே என்று கருதிய போலீசார் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சத்தமின்றி பிடித்து ரகசியமாக கண்டிக்க வேண்டும்.

பெற்றோர்களிடமும் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். இதை உணர்ந்து பதறிய மாணவிகளில் முதல்முறையாக அந்த விருந்தில் கலந்து மானத்தை பறி கொடுத்தவர்களில் ஒருவர் சகதோழிக்கு போனில் பேசி இருக்கிறார்.

அப்போது விருந்தில் நடக்கும் அலங்கோலங்களை சொல்லி தானும் ஒருமுறை அந்த விருந்தில் பங்கேற்று என்னையும் இழந்து தப்பு செய்து விட்டேன்.

இனி மேலும் அந்த தப்பை செய்ய மாட்டேன். ஆனால் தொடர்ந்து விருந்துக்கு வரச் சொல்லி ‘மெசேஜ்’ அனுப்புகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

இந்த ஆடியோ வெளியாகி போலீஸ் கைகளிலும், பெற்றோர்கள் கைகளிலும் சிக்கி இருக்கிறது.

அதை கேட்ட பெற்றோர்கள் மாணவர்கள் சீரழிவதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

நகரம் முதல் கிராமம் வரை வேர்விட்டு வளரும் இந்த மோசமான கலாச்சாரத்தை தடுக்காவிட்டால் இளைய தலைமுறையின் எதிர்கால வாழ்க்கை சீரழிவதை தவிர்க்க முடியாது.

 

Share.
Leave A Reply