மேற்கு உலகமும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காணவிரும்பவில்லை என்பதற்கு சான்றாக தற்போது மற்றொரு போர் முனையாக, மோல்டோவாவை ரஷ்யாவிற்கு எதிரான போரை தூண்டுகிறார்கள்.

மோல்டோவாவில் ரஷ்ய எதிர்ப்பை வலுவூட்டினால்,  நேட்டோ தூண்டுதலால் உருவாகும் இன்னோர் போர் களமாக மோல்டோவா மாறும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

ரஷ்யவுக்கு எதிரான திர்ப்பை வலுவூட்டல்  

போர் இயந்திரத்தை தொடர்ந்து இயங்க வைக்க, உக்ரேனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில நாடுகளும் இப்போது மோல்டோவாவை அடுத்த உக்ரேனாக மாற்றும் நோக்கத்தில் தீவிரமாக உள்ளன.

“உக்ரேன் மீதான புடினின் படையெடுப்பு உடனடி வெற்றியாக மாறாவிட்டாலும் அகண்ட ரஷ்யாவை உருவாக்க புடின் உறுதியாக இருக்கின்றார் என்று” பிரித்தானிய வெளியுறவு செயலாளரும் தற்போது பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவருமான லிஸ் ட்ரஸ் தி டெலிகிராப்பிடம் கூறியுள்ளார்.

“நான் மோல்டோவாவை நேட்டோ தரநிலையுடன் பார்க்க விரும்புகிறேன். இது எங்கள் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளுடன் நாங்கள் நடத்தும் புரிந்துணர்வே” என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அவர் மோல்டோவாவிற்கு சிறந்த இராணுவ உபகரணங்களை வழங்குவது, சோவியத்கால ஆயுதங்களை மாற்றுவது மற்றும் மேற்கத்திய தளங்களில் மோல்டோவா துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும்.

இது உக்ரேன் விடயத்தில் அதீதமாக ஆத்திரமூட்டப்பட்டதைப் போல ரஷ்யாவையும் தூண்டிவிடும். எனவே மோல்டோவா உக்ரேன் வழியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது.

மோல்டோவா பிணக்கில் ஈடுபட விரும்பவில்லை

இதற்கிடையில், மோல்டோவா உக்ரேன், ரஷ்யாவின் போரில் இருந்து விலகியிருப்பதற்கான தெளிவான விருப்பத்தை காட்டியுள்ளது. மோல்டோவாவின் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவானவர், ஆனால் நடந்துகொண்டிருக்கும் போருக்கு மத்தியில் நடுநிலைமையை கடைப்பிடிப்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

மால்டோவாவில் தற்போதுள்ள நிலவரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக உள்ளது. இருப்பினும், அது நேட்டோ சார்புடையதல்ல. நடுநிலைமை என்பது மோல்டோவாவின் கொள்கையாக அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேருவதில் மோல்டோவா எச்சரிக்கையாக உள்ளது.

மோல்டோவாவில் இரு தரப்பு அரசியல்வாதிகளும் நடுநிலைமையின் முக்கியத்துவத்தைப் பேணுகிறார்கள். டெனிஸ் செனுசா, ஒரு மோல்டோவா ஆய்வாளர், அவர், “இந்த அநாவசிய போரில் மோல்டோவா அடுத்த இலக்காக இருக்க விரும்பவில்லை என்பதை ரஷ்யாவிற்கு சமிக்ஞை செய்ததுள்ளது” என்று விளக்கியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான தனது விருப்பத்திற்காக ரஷ்யா தன்னைத் தாக்காது என்பதை மோல்டோவா புரிந்துகொள்கிறது. நேட்டோவுடனான தொடர்பு தான் புட்டினை கோபப்படுத்துகிறது என்றும் அந்த நாடு கூறுகிறது.

எவ்வாறாயினும், நேட்டோ சக்திகளே மோல்டோவாவை கூட்டணியுடனான அதன் உறவை மேம்படுத்தத் தூண்டுகின்றன, இது ரஷ்யாவையும் மோல்டோவாவையும் மோதலின் விளிம்பிற்குத் தள்ளும் என்றும் அஞ்சப்படுகிறது.

திரான்ஸ்னிஸ்ட்ரியா பின்தளம்

மோல்டோவாவை ரஷ்யாவுடனான மோதலுக்கு தள்ளும் விருப்ப முயற்சியாக, ரஷ்ய ஆதரவில் நிர்வகிக்கப்படும் மோல்டோவா பிரதேசமான திரான்ஸ்னிஸ்ட்ரியாவில் சமீபத்தில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மர்மமாக நிகழ்ந்த இந்தக்குண்டுத் தாக்குதல்கள் குறித்து திரான்ஸ்னிஸ்ட்ரியன் அதிகாரிகள் உக்ரேனைக் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் மோல்டோவா யாரையும் காரணம் கூறவில்லை.

எவ்வாறாயினும், “இந்த சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள குண்டுகள் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை” என்று மூத்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குற்றம் சாட்டினார்.

பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊகங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் இத்தகைய பார்வை ஒப்புக்கொள்ளப்படுகிறது.

குண்டு வெடிப்புகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்த எந்த உளவுத்துறை உள்ளீடுகளும் இல்லை.

மோல்டோவாவில் ரஷ்ய-எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதற்கும் பிராந்தியத்தில் மற்றொரு போரைத்தூண்டுவதற்கும் நேட்டோ எவ்வாறு அவசரமாக உள்ளது என்பதை டிரான்ஸ்னிஸ்ட்ரியா நிகழ்வுகள் கோடிகாட்டுகின்றன.

ரஷ்யா-உக்ரேன் போர் மற்ற நாடுகளுக்கும் பரவுகிறதா? பதில் இப்போதைக்கு இல்லை என்றாலும் மேலும் போருக்கு இழுக்கும் வரிசையில் அடுத்த நாடு மோல்டோவாவைத் தவிர வேறில்லை.

அதேநேரம், உக்ரேனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா ஆதரவு பிரதேசத்தின் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யாவையே குற்றம் சாட்டியுள்ளார்.

திரான்ஸ்னிஸ்ட்ரியாவின் வரலாறு


திரான்ஸ்னிஸ்ட்ரியா டினீஸ்டர் ஆற்றின் கிழக்குக் கரைக்கும் உக்ரேனுடனான மோல்டோவாவின் எல்லைக்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பாகும், இதில் சுமார் 500,000 இன ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் வசிக்கின்றனர்.

திரான்ஸ்னிஸ்ட்ரியா 1992ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, புதிதாக சுதந்திரம் பெற்ற மோல்டோவா குடியரசு மற்றும் சோவியத் உறவுகளை பராமரிக்க விரும்பும் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது.

திரான்ஸ்னிஸ்ட்ரியாவில் பிராந்தியத்தில் எப்போதும் 1500 ரஷ்ய அமைதி காக்கும் துருப்புக்கள் நிலை கொண்டுள்ளன. திரான்ஸ்னிஸ்ட்ரியாவில் இருந்து உக்ரேன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா இந்த துருப்புக்களை பயன்படுத்தக்கூடும் அல்லது குறைந்தபட்சம் உக்ரேனில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க இப்பிராந்தியத்தை பின்தளமாக ரஷ்யா வைத்துள்ளது என்று கிவ்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ரஷ்யாவுடன் இணையும் திரான்ஸ்னிஸ்ட்ரியா

மோல்டோவா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதுடன், உக்ரேனிய போரில் நடுநிலை வகிக்கும் மோல்டோவா, மிகவும் மேற்கு நோக்கியதாக உள்ளது, எனவே மோல்டோவா நீண்ட காலமாக ஐரோப்பிய குடும்பத்தில் உறுதியான உறுப்பினராக வேண்டும் என்று முனைந்து வருகிறது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உச்சிமாநாட்டின் முடிவு மோல்டோவாவின் காதுகளுக்கு இனித்த இசையாக வந்திருக்கலாம். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இறுதியாக மோல்டோவா குடியரசிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்,இதற்கு திரான்ஸ்னிஸ்ட்ரியாவில் மிக்க அதிருப்தி எதிர்பார்க்கப்பட்டது. அதிர்ச்சியான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முடிவில் அதிருப்தி அடைந்த மோல்டோவாவின் பிரிந்த பிராந்தியம், தற்போது பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது. டிரான்ஸ்னிஸ்ட்ரியா இப்போது ரஷ்யாவுடன் இணைவதாக அறிவித்துள்ளது. டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் இறையாண்மை பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலைமைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் மோல்டோவாவிற்கு அதன் அங்கத்துவத்தை வழங்க முன்வருகிறது.

நீண்ட காலமாக ரஷ்ய சார்பு பிராந்தியமாக இருந்து வரும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா, இப்போது மோல்டோவாவுக்கு ஐரோப்பிய அந்தஸ்து வழங்குவது இரு பிராந்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். மோல்டோவாவின் முக்கிய குறிக்கோள் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தை மீண்டும் ஒரு நாட்டிற்குள் ஒருங்கிணைப்பதாகும்.

ரஷ்யாவின் பூரண ஆதரவு 

டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் இந்த முடிவு ரஷ்யாவால் முழு மனதுடன் வரவேற்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் மாநில அவையில் ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அங்கீகரிக்கப்படாத டிரான்ஸ்னிஸ்ட்ரியா ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறுவதற்கான விருப்பத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.அதே நேரத்தில் ரஷ்ய அமைதி காக்கும் குழுவை மகிழ்ச்சியுடன் நடத்தியது” என்று சர்வதேச விவகாரங்களுக்கான மாநில அவை உறுப்பினர் டிமிட்ரி பெலிக் கூறினார்.

அத்துடன்,  “ரஷ்யாவில் சேரவிரும்பிய முன்மொழிவு தொலைதூர எதிர்காலம் பற்றியதும், எதிர்காலத்தில் ஒரு வழிகாட்டும் திசையாகும். எங்களுக்கு நெருக்கமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் அங்கு வசிப்பதால், இந்த திட்டத்தை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என்று மாநில அவை உறுப்பினர் மேலும் கூறினார்.

வெளிப்படையாக, ரஷ்யா டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தை திறந்த கரங்களுடன் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்தில் மற்றொரு இறுக்கமான அறையாக, கூட இருக்கலாம்.

Share.
Leave A Reply