வாஷிங்டன்: வாரத்தில் 6 நாளும் எனக்கு ஆண்கள் வேண்டும் என்றும், இதுவரை 700 பேருடன் உறவு வைத்துள்ளேன் என்றும் இதற்காக நான் வெட்கப்படவில்லை எனவும் ஆஸ்திரேலிய டிவி நடிகை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘தி பேச்சுலர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்குள்ள இளசுகளின் மத்தியில் பிரபலமானவர் பெலிண்டா என்ற டிவி நடிகை.

38-வயதான இவர் அண்மையில் அங்குள்ள ஒரு ரேடியோ ஷோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இதுவரை எத்தனை பேருடன் உறவு வைத்திருந்தேன்… பாலியல் ரீதியாக அடிக்ட் ஆகியிருந்தேன்… என ஏகத்துக்கும் ஓபனாக பேசி தனது பேட்டியை பட்டிதொட்டியெங்கும் வைரலாக்கி இருக்கிறார்.

700 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் உறவு

இதுவரை 700 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் உறவு வைத்திருந்ததாக கூறியிருக்கும் பெலிண்டா, ஒருவாரத்தில் 6 நாட்களும் டேட்டிங் செய்ய ஆண்களை தேடி அலைந்ததாகவும் கூறியிருக்கிறார்.

பெலிண்டா தனது பேட்டியில் இது பற்றி கூறும் போது ”எனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையே நான் உணரவில்லை… ஒருவழியாக இந்த பிரச்சினையில் இருந்து மீண்ட பிறகே எனக்கு பாலியல் ரீதியாக அடிக்ட் ஆகியிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன்.

எனக்கு இருந்த பிர்ச்சினை என்னவென்றால் டாக்ஸிக் ஆன நபர்களையே நான் அதிகம் விரும்பியிருக்கிறேன்.

15 மாதங்கள் உறவு கொள்ளாமல் இருந்தேன்

பாலியல் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எனக்கு இருந்த பிரச்சினையில் இருந்து நான் முழுவதுமாக குணம் அடைய 8 வருடங்கள் ஆனது.

குணம் அடைந்த பிறகு 15 மாதங்கள் யாருடனும் உறவு கொள்ளாமல் இருந்தேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட குணம் அடையாத பிரச்சினை மூலமாக எனக்கு இப்படி ஒரு செக்ஸ் அடிக்‌ஷன் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் குணம் அடைந்த பிறகுதான் யோசித்தேன்.

எனது வாழ்க்கையை செக்ஸ் உறவு ஆட்சி செய்துவிட்டது. அதற்கு இணங்கி செயல்படு ஒரு அடிமை போல ஆகிவிட்டேன்.

ஆண்களை தேடி அலைந்தேன்

எனக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. வெறும் மேலோட்டமாக பார்த்தால் உங்களுக்கு அது தெரியாது.

எத்தனை பேருடன் நான் உறவு வைத்திருந்தேன் என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் இந்த எண்ணிக்கை 700 -ஐ தாண்டியிருக்கும்.

இத்தனை பேருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை நான் கேவலமாக நினைக்கவில்லை” என்றார்.

பெலிண்டாவுக்கு இந்த பிரச்சினை இருந்த போது டேட்டிங் செயலிகள் பிரபலம் அடைந்து இருக்கவில்லை.

இதன் அர்த்தம் என்னவென்றால், வாரத்தில் ஆறு நாட்களும் உறவு கொள்வதற்காக ஆண்களை தேடி வெளியே சென்று இருக்க வேண்டும் என்பதேயாகும்.

துணை கிடைத்த பிறகு தான் இனி..

தான் சந்தித்த ஆண்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள் என்று கூறும் பெலிண்டா, ”எனக்கு தேவை என்னவென்று நான் சந்திக்கும் நபர்களிடம் கூறுகையில், பாலியல் உறவைக் காட்டிலும் நேசம் கொண்டதாகவும் இருந்தது” என்றார்.

இன்னும் தனக்கு பாலியல் தேவை அதிகமாக இருப்பதாக கூறும் பெலிண்டா.. ஒருவரின் துணை கிடைத்த பிறகே இனிமேல் செக்ஸ் வைப்பேன் என்று உறுதிபட கூறிக்கொண்டு இருக்கிறார்.

 

Share.
Leave A Reply