விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெயிலர் விநாயகர்’ சிலை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டரில் உள்ள ரஜினியை போலவே விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை ‘ஜெயிலர் சிலை’ எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply