புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 15 சிறுமிக்கு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்த சம்பவத்தில் போலிசார் நடத்திய விசாரணையில், கரோனா ஊரடங்கு காலத்தில் 2020 ம் ஆண்டு முதல் பெற்ற மகளையே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தந்தை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததால் சிறுமி கர்ப்பமாகி இறந்த நிலையில் குழந்தை பிறந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் கால் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதியின் உத்தரவில், மகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து பாதுகாக்க வேண்டிய தந்தையே மகளை வன்புணர்வு செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையும், பாலியல் சம்பவத்தை மறைக்க மகளையே மிரட்டி மாற்றி வாக்கு மூலம் கொடுக்க வைத்த குற்றத்திற்காக 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.