தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் ‘மேலவை இலங்கை கூட்டணி’ நேற்று உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழர்களே,முஸ்லிம்களே,சிங்களவர்களே வாருங்கள் ஒன்றிணைந்து தாய் நாட்டை பாதுகாத்து,பொருளாதார சவால்களை எதிர்கொள்வோம் என நாட்டு மக்களுக்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

சுயாதீன அரசியல் கட்சிகளின் கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர்,இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்,கொழும்பில் உள்ள ஈரான் நாட்டு தூதர அதிகாரி,உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர திலங்க சுமதிபால,பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்,ஜி.எல் உள்ளிட்ட சுயாதீன தரப்பினரின் ‘சுதந்திர மக்கள் சபை’ உறுப்பினர்கள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர்.

மேலவை இலங்கை கூட்டணியின் ஆலோசகராக அத்துரலியே ரத்ன தேரர்,செயலாளராக வீரசுமன வீரசிங்க,தேசிய அமைப்பாளராக வாசுதேவ நாணயக்கார,உப தலைவர்களாக திஸ்ஸ விதாரன,உதய கம்மன்பில,உப செயலாளராக கெவிந்து குமாரதுங்க ஆகியோர் நியமணம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 09 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று மஹகரவில் உள்ள தேசிய இளைஞர் மன்றத்தில் நேற்றைய தினம் கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று மாலை 03.00 மணியளவில் மஹரக தேசிய இளைஞர் மன்றத்தின் கேட்போர் கூட்டத்தில் சர்வமத வழிபாடுகளுடன் மாநாடு ஆரம்பமானது.

கேள்விகளுக்கான விடை என்ற தொனிப்பொருளில் ஆரம்பமான மாநாட்டின் வரவேற்பு உரையை இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க வீரசுமன ஆற்றினார்.

விஜயதரணி தேசிய சபையின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் மேலவை ஸ்ரீ லங்கா கூட்டணியின் கொள்கை வெளியீட்டுக்கு முதலாவதாக டிஜிட்டல் முறைமையில் கைச்சாத்திட்டார்,

அதனை தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார,பிவிதுறு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில,லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோர் டிஜிட்டல் முறைமையில் கைச்சாத்திட்டனர்.

மேலவை  ஸ்ரீ லங்கா கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ச,ஆலோசகராக அத்துரலியே ரத்ன தேரர்,செயலாளராக ஜி.வீரசிங்க,தேசிய அமைப்பாளராக வாசு தேவ நாணயக்கார, உப தலைவராக திஸ்ஸ விதாரன,உப தலைவராக உதய கம்மன்பில,உப செயலாளராக கெவிந்து குமார துங்க தெரிவு செய்யப்பட்டு பதவி விபரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மேலவை இலங்கை கூட்டணியின் சத்திய பிரமாணத்தை தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்பில் நிகழ்த்தினார்,

மேலவை ஸ்ரீ லங்கா கூட்டணியின் கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து மேலவை ஸ்ரீ லங்கா கூட்டணியின் ஆலோசகர் அத்துரலியே ரத்ன தேரர் மாநாட்டின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து கூட்டணியின் உப செயலாளர் கெவிந்து குமாரதுங்க, உப தலைவர் திஸ்ஸ விதாரன ஆகியோர்; உரையாற்றினர்.

அதனை தொடர்ந்து கூட்டணியின் உப தலைவர் உதய கம்மன்பில,தேசிய அமைப்பாளர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச உரையாற்றியதை தொடர்ந்து மாலை (நேற்று)06.15 மணியளவில் தேசிய கீதம் இசைத்தலுடன் அங்குரார்ப்பண நிகழ்வு நிறைவடைந்தது.

 

Share.
Leave A Reply