இரத்மலானை – பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

11,58,000-இற்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து சென்று பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply