மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட மாணவி பாடசாலையின் மாணவர் தலைவி என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தினால் கவலையடைந்த ஆசிரியர்கள் பாடசாலையில் மதிய உணவை வழங்க தீர்மானித்துள்ளனர்.
குறிப்பிட்ட பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கற்க்கும் மாணவகர்களிற்கு மதிய உணவு வழங்கப்படுவது வழமை அன்று தரம் மூன்றில் கல்விகற்கும் மாணவர்கள் வழமையை விட அதிக சோறு வழங்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் மதிய உணவு தயாரிக்கும் பெண் போதிய அரிசியில்லை என தெரிவித்துள்ளார். அதனால் அந்த சிறுவர்கள் வெறும் சோற்றை மாத்திரம் உண்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.