பஸ்ஸில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை குறித்த பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த gஸ்ஸில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்குள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்துக்கொண்டு பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பஸ்ஸினுள் வைத்து மடக்கி பிடித்தனர்.

மடக்கிப்பிடித்த இளைஞனை யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.

Share.
Leave A Reply