யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (04) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவம்பர் 4ஆம் திகதி வரையிலான கால பகுதியில் 2774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத ரீதியாக பார்க்கின்ற பொழுது ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து மே ஜூன் மாதமளவில் ஒரு அதிகரித்த பரம்பல் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply