இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்குண்டு கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுமாறும் அந்த கப்பலில் இருந்த ஒருவர் தோலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கப்பலில் சிறுவர்கள் உட்பட 306 இலங்கையைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் இவர்களின் உயிரை காப்பாற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்குமாறும் அந்த கப்பலில் பயணித்துள்ளவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை உடனடி ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply