முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார்.

விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர்: வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார்.

அப்போது விடுதலை குறித்த விவரத்தை அவர்களிடத்தில் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து வக்கீல் ராஜகுரு கூறியதாவது:-

விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் சாந்தனை சந்தித்தேன். பின்னர் முருகனை சந்தித்தேன்.

அதைத்தொடர்ந்து இருவரிடமும் பேசினேன். விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொண்ட வக்கீல்கள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

முருகன் வெளியே வந்த பின்னர் தனது மனைவியுடன் தங்கியிருக்க போவதாக உருக்கமாக தெரிவித்தார்.

மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? லண்டன் அல்லது செல்வது குறித்து முடிவெடுப்பேன் என முருகன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

 

6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது- ரவிச்சந்திரன் தாயார் பேட்டி

ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டி ஆகும்.

ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். விளாத்திகுளம்: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் எஞ்சிய 6 பேரையும் நேற்று சுப்ரீக் கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டி ஆகும்.

இவர் தற்போது பரோலில் இருந்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விடுதலை குறித்து ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:- பல ஆண்டுகள் சிறைக்கு பின்னர் ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

7 பேர் விடுதலைக்காக தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்தது.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply