இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கஞ்சாவை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply