உலகில் உயிர்வாழ்ந்தவர்களில் மிக நீளமான மூக்கு கொண்ட மனிதராக அறியப்பட்ட மனிதர் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் வெட்டர்ஸ் என்பவரே உலகின் மிக நீளாமன மூக்கு கொண்ட மனிதராக கருதப்படுகிறார். 18 ஆம் நூற்றாண்டில் சேர்க்கஸ் கலைஞராக பணியாற்றியவர் இவர்.

தோமஸ் வெட்டர்ஸின் மூக்கின் நீளம் 19 சென்ரிமீற்றர் (7.5 அங்குலம்) எனத் தெரிவிக்கப்படுகிறது.

1730 ஆம் ஆண்டளவில் பிறந்த அவர் 1780 ஆம் ஆண்டளவில் இறந்தார்.

அவரின் மெழுகு சிலைகளும் பலரையும் கவர்ந்து வருகின்றன.

எனினும், தற்போது உலகில் உயிர்வாழும் மனிதர்களில் மிக நீளமான மூக்கு கொண்டவர் துருக்கியைச் சேர்ந்த மெஹ்மெத் ஒஸியுரேக் என்பவராவார். அவரின் மூக்கின் நீளம் 8.8 சென்ரிமீற்றர் (3.46 அங்குலம் ஆகும்)

Share.
Leave A Reply