உலகிலேயே அதிக உடற்பருமன் கொண்ட சிறுவன்‘ என அறியப்பட்ட ஆர்யா பர்மனா தனது நிறையை 190 கிலோகிராமில் இருந்து 87 கிலோகிராமாகக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யாவுக்கு தற்போது 16 வயது எனக் கூறப்படுகின்றது.

இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் 190 கிலோ கிராம் எடையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்யாவின் 6 வருட கடின உழைப்பால் தற்போது அவரது உடல் எடையை 87 கிலோவாக குறைத்துள்ளார்.

ஆர்யாவின் இம் மாற்றத்தில் பிரபல உடற் பயிற்சியாளர் அடே ராய்க்கு பெரும் பங்கு உண்டு எனவும், அவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து ஆர்யாவுக்கு உடல் எடை குறைப்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகின்றார்.

இது குறித்து அடே ராய் கூறுகையில், ”நான் ஆர்யாவை மிகவும் மனதார பாராட்டுகிறேன். அவர் விளையாட்டுகளை மிகவும் விரும்புகிறார்.

அவருக்கு காற்பந்து மிகவும் பிடிக்கும். இதனால் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.. அத்துடன் தனது உடல் எடையை குறைக்க தினமும் பல பயிற்சிகளை மேற்கொண்டார்.

இது தவிர, உணவு மற்றும் பானங்கள் விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடித்தார். அதன் விளைவு விரைவில் பல கொடுக்க ஆரம்பித்தது என்றார்.

அத்துடன் ”ஆர்யா உடல் எடையை குறைத்தபோது, அதன் பிறகு அவரது உடலில் இருந்து கூடுதல் சதையை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் நிறைவேற்றப்பட்டது. இவ் அறுவை சிகிச்சையின் உதவியுடன், அவரது வயிறு சிறியதாகிவிட்டது” என்றார்.

Share.
Leave A Reply