கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஜேபி நகரை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் (வயது 67). இவர் கடந்த 16-ம் தேதி தனது பேரனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
பேரனை பேட்மிட்டன் விளையாட்டு வகுப்பில் சேர்த்த பின் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், அன்று இரவு முழுவதும் பாலசுப்ரமணியன் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜேபி நகரில் உள்ள சாலையில் பாலசுப்ரமணியன் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிளாஸ்டி கவரால் சுற்றப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் பாலசுப்ரமணியனின் செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் அவரது வீட்டில் வேலை செய்துவந்த வேலைக்கார பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொழிலதிபர் பாலசுப்ரமணியன் கடந்த 16-ம் தேதி அவரது வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வேலைக்கார பெண்ணுடன் பாலசுப்ரமணியன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பாலியல் உறவில் இருந்தபோது பாலசுப்ரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களில் பாலசுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசில் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தனது கணவர், சகோதரருக்கு போன் செய்துள்ளார்.
பின்னர், 3 பேரும் சேர்ந்து பாலசுப்ரமணியனின் உடல் முழுவதும் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஜேபி நகர சாலையில் வீசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வேலைக்கார பெண், அவரது கணவர், சகோதரரரை போலீசார் கைது செய்தனர்.