திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டம் தற்போது இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அப்போது அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பாரியளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்த சட்டம் அமுலுக்கு வருவது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவேற்றப்படும் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துக்கொள்வதும், திருமணத்துக்கு முன் இணைந்து வாழ்வதும் சட்ட விரோதமானது என்றும், இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உமர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply